சினிமாவில் ஆரம்பகட்டத்தில் புதிதாக நடிக்க வரும் நடிகர் மற்றும் நடிகைகள் பல சோதனைகளை கடந்து தான் ஆக வேண்டும், இந்த சோதனைகளை கலந்தால் மட்டுமே சினிமாவில் சரித்திரம் படைக்க முடியும், அப்படி தன்னுடைய ஆரம்ப காலத்தில் பல சோதனைகளை கடந்து வந்து சரித்திரத்தில் இடம் பிடித்தவர் தான் தல அஜித்.
தல அஜித் எப்பொழுதும் நல்லது செய்ய நினைப்பவர் ஆனால் இதுபோல் நினைப்பவர்களுக்கு தான் கொஞ்சம் நல்லதும் நிறைய கெட்டதும் நடக்கும் அப்படி தான் தல அஜித் ஒருசிலருக்கு சப்போர்ட் செய்ய ஒரு கூட்டமே தல அஜித்தை எதிர்த்து சினிமாவை விட்டு காலி செய்ய வேண்டும் என நினைத்தது, என பிரபல இயக்குனர் விக்ரமன் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எப்பொழுதுமே பெப்ஸி யூனியனுக்கும் இயக்குனர் சங்கத்திற்கும் ஏதாவது பிரச்சனை போய்க் கொண்டேதான் இருக்கும் அப்படி பிரச்சனை போய்க் கொண்டிருந்த காலகட்டத்தில் தல அஜித் இயக்குனர்களுக்கு சப்போர்ட் செய்யாமல் பெப்ஸி தொழிலாளிகளுக்கு சப்போர்ட் செய்துள்ளார் அங்குதான் வெடித்தது பிரச்சனை. தல அஜித் எப்பொழுதும் முதன்மை தொழிலாளி முதல் கடைசி கட்ட தொழிலாளர்கள் வரை பார்த்து பார்த்து அவர்களுக்கு நல்லது செய்பவர் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
அந்தவகையில் பெப்ஸி யூனியனுக்கு சப்போர்ட்டாக இருந்துள்ளார் தல அஜித் இதனால் இயக்குனர் சங்கம் தல அஜித்தை வைத்து இனி பணத்தை இயக்கக் கூடாது எனவும் எந்த தயாரிப்பாளரும் அவருக்கு பட வாய்ப்பு கொடுக்கக் கூடாது எனவும் கூட்டத்தில் ஒன்று கூடி முடிவு எடுத்ததாக ஒரு பேட்டியில் விக்ரமன் கூறியுள்ளார்.
ஆனால் தல அஜித்திற்கு இரண்டாவது முறையாக உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படத்தின் மூலம் நானே வாய்ப்பு கொடுத்தேன் எனவும் கூறியுள்ளார் விக்ரமன், ஒன்று கூடி முடிவு செய்த அவர்களுக்கு தெரியாது அஜித் இன்று சினிமாவிற்கு சோறு போடும் அளவிற்கு வளர்வார் என்று என விக்ரமன் பேட்டியில் ஆவேசமாக பேசினார்.