தென் இந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலா பால் இவர் சமீபத்தில் ஒரு பெட்டியில் தெலுங்கு படங்களில் நடிக்காததற்கு இதுதான் காரணம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் இந்த சம்பவம் மிகவும் வைரலாகி வருகிறது.
பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். அதை அடுத்து 2010 ஆம் ஆண்டு வெளியான மைனா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானார். இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் நடிகை அமலா பால் அவர்களுக்கு ஒரு சிறந்த திரைப்படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
ஆம் மைனா திரைப்படம் வெற்றிக்கு பிறகு நடிகை அமலா பால் அவர்களுக்கு பட வாய்ப்பு அதிகமாக வந்து கொண்டே இருந்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதன்படி 2011 ஆம் ஆண்டு நாக சைதன்யா நடிப்பில் வெளியான பெஜவாடா இந்த திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் என்ட்ரி கொடுத்தார்.
இந்த திரைப்படத்தின் பிறகு நடிகர் ராம்சரண் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோரின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் தெலுங்கில் நான்கு படங்களில் மட்டும் நடித்து முடித்துவிட்டு அதன் பிறகு தெலுங்கு பக்கம் திரும்பாமல் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் இருந்து விலகியதற்கு என்ன காரணம் என்று நடிகை அமலா பால் தெரிவிக்கவில்லை அதன் பிறகு தற்போது ஒரு காரணத்தைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதன்படி நடிகை அமலாபால் கூறியதாவது நான் தெலுங்கு படங்களில் நடிக்கும் போது அந்த திரையுலகம் குறிப்பிட்ட குடும்பத்தின் பிடியில் இருந்ததை நான் உணர்ந்தேன். மேலும் நான் நடிக்கும் போது தெலுங்கு படங்கள் வித்தியாசமாக இருக்கும் ஒவ்வொரு படத்திலும் குறைந்தது இரண்டு ஹீரோயின்களாவது இருப்பார்கள். அவர்களை பாடல்களுக்கும் காதல் காட்சியில் நடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.
அதிலும் ஓபன் ஆக சொல்ல வேண்டும் என்றால் பெண்களை அவர்கள் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டார்கள். பெரும்பாலும் தெலுங்கு சினிமாவில் கமர்சியல் படங்களை மட்டுமே எடுப்பார்கள் அதிலும் ஹீரோக்கள் தான் பெரும்பாலான காட்சிகளை ஆக்கிரமித்து விடுவார்கள். இதனால்தான் என்னால் அங்கு நடிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் சினிமா அப்படி கிடையாது இங்கு எனக்கு விதவிதமான கேரக்டர்கள் அதிகமாக கிடைத்தது என அமலாபால் கூறியுள்ளார்.