கடந்த ஆறு வருடங்களாக காதலித்து சில மாதங்களுக்கு முன்பு மிகவும் பிரம்மாண்டமாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இவருடைய திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்தில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டு ஆசிர்வாதம் செய்திருந்தார்கள் திருமணத்திற்கு பிறகு ஏராளமான கோவில்கள் மற்றும் ஹனிமூனுக்காக பல நாடுகள் சென்று அங்கு எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்தார்கள்.
மேலும் அடிக்கடி விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி வந்தார் சமீப காலங்களாக இருவரும் தங்களுடைய பட வேலைகளில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித் நடிக்க இருக்கும் அவருடைய 62வது திரைப்படத்தினை அடுத்ததாக இவர் தான் இயக்க இருக்கிறார்.
எனவே அதற்கான கதையை உருவாக்கி வருகிறார் இவரை தொடர்ந்து நடிகையின் நயன்தாரா இயக்குனர் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பேட்டி ஒன்றியம் நயன்தாரா பற்றி பேசி உள்ளார் அந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் கூறியதாவது நயன்தாரா பற்றி தெரியாதவர்கள் வேறு மாதிரி பேசுவார்கள் மீடியாக்களில் சொல்லும் நயன்தாரா உண்மையானவர் இல்லை நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் சிலருக்கு மட்டும் தான் உண்மையான நயன்தாராவை தெரியும்.
எனவே அவரைப் பற்றி தெரியாத சிலர் தான் ஆனா.. ஊனா.. நயன்தாராவோட பழைய உறவுகள் வைத்து மீம்ஸ்கள் போடுவாங்க கிண்டல் பண்ணுவாங்க எப்பொழுது பார்த்தாலும் பழைய கதையை எடுத்து இப்படி பண்றது கொஞ்சம் கோபம் வரும் எனவே மீடியாவில் சொல்லும் நயன்தாரா வேற நிஜமான நயன்தாரா வேற என விக்னேஷ் சிவன் கூறி உள்ளார்.