தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களை தந்து கோலிவுட்டில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமான மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கலந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி அன்று வெளியாகி மிகப்பெரிய ஹிட் பெற்ற திரைப்படம் தான் கர்ணன்.
இந்த படத்தில் தனுஷை தொடர்ந்து ரஜிஷா விஜயன், யோகி பாபு, லக்ஷ்மி பிரியா, கௌரி கிஷன், நட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசை அமைத்திருந்தார் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.
மேலும் இந்த படம் சில சர்ச்சைகளிலும் சிக்கிய நிலையில் ஆனால் கொரோனா பிரச்சனையின் காரணமாக தமிழ்நாட்டில் 50 சதவீத திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் கர்ணன் படம் வெளியான முதல் மூன்று நாட்களில் 25 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
அந்த வகையில் இந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் குதிரைக்கார சிறுவன் இந்த படத்தில் காளி என்ற கதாபாத்திரத்தில் கிராமத்தில் உள்ள சிறுவனை போலவே தத்ரூபமாக நடித்திருந்தார் இவர் தனுஷிடம் பேசுவது, குதிரைகளை பார்த்துக் கொள்வது, இறுதி காட்சியில் போலீஸ் அடிக்கும் போது அவரை தாங்கிக்கொண்டு கர்ணனை அழைத்து செல்வது என மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.
இவ்வாறு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இவர் இதற்கு முன்பு சீரியல்களில் கூட நடித்துள்ளாராம் கர்ணன் படத்தில் அவருடைய நடிப்பிற்கு ஒன்றரை லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. கர்ணன் படத்திற்குப் பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வரும் சிறுவனை சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்று பேட்டி எடுத்தது அதில் காளி கூறியதாவது, கர்ணன் படத்தில் நடித்து வந்த பணத்தை என்னுடைய சகோதரி மகளின் சடங்கிற்கு செலவு செய்து விட்டதாகவும் தற்போது எந்த வேலையும் இல்லாமல் இருப்பதாகவும் படங்களின் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.