வெறும் 200 ரூபாய் கொடுத்து கோயம்பேட்டில் இறக்கி விட்டார்கள்.? கண்ணீருடன் வீடியோவை வெளியிட்ட பருத்திவீரன் பட நடிகர்.!

paruthiveeran

சினிமாவில் ஒரு வருடத்தில் பல இயக்குனர்கள் வந்து செல்கிறார்கள் அதேபோல் அனைத்து இயக்குனர்களின் திரைப்படங்களும் வெற்றி அடைகின்றன என்று கேட்டால் அது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. அதிலும் ஒரு சில இயக்குனர்கள் ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கே சென்று விடுவார்கள்.

இந்த வகையில் 2007ம் ஆண்டு கார்த்தி, சரவணன், பிரியாமணி கஞ்சாகருப்பு ஆகியவர்களை வைத்து அமீர் இயக்கிய திரைப்படம் தான் பருத்திவீரன் இந்த திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமானது அதுமட்டுமில்லாமல் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. கார்த்திக் முதன்முதலில் அறிமுகமாகிய இந்த திரைப்படம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்.

கார்த்தியா இப்படி நடித்தது என பலரும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அவரின் நடிப்பு மிகவும் பிரபலமாக இருந்தது இந்த திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும் அந்த அளவு அவர்களின் கதாபாத்திரம் மிகவும் அழுத்தமாக இருந்தது.

இந்த நிலையில் பருத்திவீரன் திரைப்படத்தில் ஒரு டீக்கடை காட்சியில் ஆறுமுகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் டீ குடிக்க வந்த கார்த்தி மற்றும் சரவணன் கஞ்சாகருப்பு பார்த்து அப்ப நீ ஓனர் இல்லையா என டீ கடை ஓனர் முன்பே கலாய்ப்பார்கள் அதனால் கஞ்சாகருப்புவை டீ கடை ஓனர் திட்டுவார்.

இந்த காமெடி ஓட்டுமொத்த ரசிகர்களையும் சிரிக்க வைத்தது. இந்த நிலையில் டீ கடை ஓனர் ஆறுமுகம் சமீபத்தில் பிரபல பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் அவர் கூறியதாவது நான் படத்தில் நடித்து 15 வருடம் ஆகிவிட்டது ஒரு காட்சியில் நடித்து இருந்தாலும் மக்கள் மனதில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டேன் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு சொந்தமாக டீக்கடை ஒன்று இருந்தது அந்த டீக்கடையில் உட்கார்ந்து இருக்கும்பொழுது ஒரு பட குழுவினர் வந்தனர் எனக்கு என்ன பண்ண போறாங்கன்னு எதுவும் தெரியவில்லை அந்த தாடி வைத்திருந்தவர் வந்து அமீர் சார் என்று சொன்னாங்க நானும் வணக்கம் ஐயா என்று சொன்னேன்.

காமாட்சி அம்மன் டீ ஸ்டால் என போட்டு இருந்தது அதனை முதலில் காட்டிவிட்டு அமீர் அவர்கள் நீங்கள் உட்கார்ந்து எழுதுற மாதிரி எழுதிக்கொண்டே இருங்கள் என கூறினார் அப்பொழுது கார்த்திக் சார் அவர்களுக்கு முதல் படம் என்பது பலருக்கும் தெரியாது அப்பொழுது டயலாக்ஸ் சொன்னார்கள் நானும் அதே போல் நடித்துக் கொடுத்தேன்.

இந்த திரைப்படத்தை மதுரையில் உள்ள திரையரங்கில் ஓடியது அப்பொழுது நான் அந்த திரைப்படத்தை போய் நான் பார்த்தேன் ஆனால் அந்த காட்சியில் நடித்தது நான் என்று பலருக்கும் தெரியவில்லை அதில் ஒருத்தர் மட்டும் நீங்கள்தான் அந்த படத்தில் நடித்தவர் என கேட்டார் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு நான் சைக்கிள் கடை வைத்திருந்தேன்.

அதற்கு முன்பு பிரபல நடிகர் சசிகுமார் தாத்தாவின் திரையரங்கில் டிக்கெட் கிழித்து கொடுத்து இருந்தேன். பருத்திவீரன் திரைப்படத்திற்கு பிறகு சீமராஜா, தாமிரபரணி, ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் இப்பொழுது எந்த ஒரு வாய்ப்பும் இல்லை என கூறினார் அதை போல் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் பருத்தி வீரன் டப்பிங் காக சென்னை வந்த பொழுது சந்தித்த பிரச்சனைகளைப் பற்றி ஆறுமுகம் பேசினார். அவர் கூறியதாவது அமீர் சார் அப்பொழுது அவர்களுடன் இருக்கும் ஆள்களை அனுப்பி என்னை மதுரைக்கு பஸ் ஏற்றி விட்டு வர சொன்னார். ஆனால் அவர்கள் என்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு கூட்டிக்கொண்டு போய் போற பஸ்ல கைல வெறும் 200 ரூபாய் கொடுத்து போங்கல் எனக்கூறினார்கள் இதை வைத்துக்கொண்டு எப்படி நான் போறது எனக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவர்கள் கிளம்பி விட்டார்கள்.

அதன் பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை பின்பு பாண்டிச்சேரிக்கு சென்று எனக்கு தெரிந்தவர்களிடம் காசை வாங்கிக் கொண்டு மதுரைக்கு சென்றேன் என அந்த பேட்டியில் கூறினார்.

paruthiveeran
paruthiveeran