பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இந்த சீரியல்கள் ஒவ்வொன்றுமே ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பது மட்டுமில்லாமல் இதில் நடித்து வரும் நாடிகைகளும் மிகவும் பிரபலமாகி விடுகிறார்கள்.
அப்படி முத்தழகு என்னும் சீரியலில் நடித்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் லட்சுமி வாசுதேவன் இவ்வாறு பிரபலமான நமது நடிகையின் புகைப்படத்தை சிலர் மாற்றம் செய்து தவறாக வாட்ஸ் அப்பில் பகிர்ந்து உள்ளார்கள் இதனால் அவர் புகார் அளித்துள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் இது குறித்து அவர் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார் அதாவது அந்த வீடியோவில் அவர் கூறியது என்னவென்றால். கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கியுள்ளார்கள் என ஒரு எஸ்எம்எஸ் என்னுடைய வாட்ஸ் அப்பிற்கு வந்தது.
உடனே என்னவென்று பார்ப்பதற்காக நான் அந்த லிங்கை கிளிக் செய்தேன். இவ்வாறு அந்த லிங்கை கிளிக் செய்த சில நாட்கள் இல்லையே எனக்கு மற்றொரு வந்தது அந்த மெசேஜில் நான் 5000 ரூபாய் பேங்கில் கடன் பெற்றுள்ளேன் அதனை உடனடியாக கட்ட வேண்டும் என கூறியிருந்தார்கள்.
அது மட்டும் இல்லாமல் அப்படி கட்டவில்லை என்றால் தன்னுடைய புகைப்படம் அனைத்தையும் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியது மட்டும் இல்லாமல் ஆபாசமாகவும் பல்வேறு வார்த்தைகளை விட்டு உள்ளார்கள் இதனை உடனே நான் கண்டறிந்து சைபர் கிரைம் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன்.
பின்னர் தெரியாத நபர் என்னுடைய புகைப்படங்களை மார்ஃப் செய்து என்னுடைய வாட்ஸ் அப்பில் இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு புகைப்படத்தை அனுப்பி வைத்து என்னுடைய இமேஜஸ் பாயில் செய்து விட்டார்கள். இதிலிருந்து யாரேனும் உங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது என்று ஏதேனும் லிங்க் அனுப்பினால் செய்ய வேண்டாம் என தன்னுடைய அனுபவத்தில் கதறி கூறியுள்ளார்.