“விக்ரம் திரைப்படம்” வெற்றி பெற முழுக்காரணம் இவர்கள் தான்..! உலக நாயகன் பதில்.

kamal
kamal

தோல்வியை சந்திக்காத இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ் இவர் முதலில் மாநகரம் என்னும் படத்தை இயக்கி அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி, விஜயை வைத்து மாஸ்டர் அண்மையில் நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் உடன் கைகோர்த்து விக்ரம் என்னும் படத்தை இயக்கினார்.

உலகநாயகன் கமலஹாசன் இந்த படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் இந்த படத்தை பிரமாண்ட பொருள் செலவில் தயாரித்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அனைத்து இடங்களிலும் சூப்பராக ஓடியதனால் இந்த திரைப்படம் எதிர்பார்க்காத ஒரு வசூலை அள்ளியது. விக்ரம் திரைப்படம் ஒட்டுமொத்தமாக சுமார் 420 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரம் படத்தால் உலகநாயகன் கமலஹாசனுக்கு ஏகப்பட்ட பணம் குவிந்ததாக சொல்லப்படுகிறது காரணம் நடிப்பதையும் தாண்டி இந்த படத்தை தயாரித்ததால் ஷேர் மட்டுமே பல கோடி அவருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. விக்ரம் படம் பெரிய சாதனையை படைத்துள்ளதால் இந்த படம் பற்றி தான் எல்லா இடத்திலும் பேசப்பட்டு வருகின்றன.

கமலஹாசனும் விக்ரம் படம் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறார் அண்மையில் பேட்டி ஒன்றில் கூட விக்ரம் படம் வெற்றி பெற யார் காரணம் என்பதையும் அவர் வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார். விக்ரம் படம் வெற்றி பெற காரணம்  முழுக்க முழுக்க ஆடியன்ஸ் தான் ஆடியன்ஸ் பெரிய படமாக இருந்தாலும் சரி சின்ன படமாக இருந்தாலும்

சரி படம் பிடித்திருந்தால் மட்டுமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் அதனாலயே அந்த படம் வெற்றி படமாக மாறும் ஏன் அண்மை காலமாக பெரிய நடிகர்கள் படங்கள் கூட தோல்வியை சந்தித்துள்ளது. ரசிகர்களுக்கு படம் பிடித்திருந்தால் மட்டுமே வெற்றி படமாக மாற வாய்ப்புகள் உள்ளது அதை விக்ரம் படம் நிறைவேற்றியது என கமலஹாசன் வெளிப்படையாக போட்டு உடைத்தார்.