நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் சினிமாவில் எப்படி சிறந்து விளங்குகிறாரோ அதேபோல தனது குடும்ப வாழ்க்கையிலும் நல்ல மனிதராக ஜொலித்து வருகிறார். சூர்யா நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டு இருவரும் சினிமா மற்றும் குடும்ப வாழ்க்கை என சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் தனித்தனியாக பல சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகின்ற நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் 2டி என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் பல சிறந்த படங்களை வெளியிட்டும் வருகின்றன. அந்த வகையில் அண்மையில் சூர்யாவின் தம்பி கார்த்தி நடிப்பில் உருவான விருமன்.
திரைப்படத்தையும் சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகி திரையரங்கில் வெற்றி நடை கொண்டு வருகிறது. விரும்பன் படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து அதிதி ஷங்கர் , இந்திரஜா, சரண்யா பொன்வண்ணன் சூரி பிரகாஷ்ராஜ் போன்ற பலரும் நடித்துள்ளனர்.
படத்தில் ஹீரோயினாக முதல் முதலாக அறிமுகமாகியுள்ள அதிதி சங்கரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. படம் ஒவ்வொரு நாளும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வெற்றி கண்டுள்ள நிலையில் அண்மையில் விருமன் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அதில் படக்குழு மற்றும் தயாரிப்பாளர் சூர்யா போன்ற பலரும் கலந்து கொண்டனர். அப்போது அங்கு மேடையில் பேசிய சூர்யா என்னுடைய வெற்றிக்கு காரணம் எனது குடும்பம் மற்றும் ஜோதிகா தான் அவர்கள் இல்லை என்றால் என்னால் இந்த அளவிற்கு சாதித்திருக்க முடியாது என பேசி உள்ளார்.
படங்களில் வேலை புரியும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் படத்தின் ஒட்டுமொத்த டீமும் இணைந்து வேலை செய்தாலும் குடும்ப சப்போர்ட் இருந்தால்தான் ஒருவர் முன்னேறி வருகிறார்கள். அந்த வகையில் எனது வெற்றிக்கு காரணம் என் குடும்பமும் மற்றும் என் மனைவி ஜோதிகாவும் தான் என ஜோதிகாவை புகழ்ந்து பேசி உள்ளார் சூர்யா.