தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனக்கு எந்த மாதிரியான கதைகள் சூட்டாகும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு அந்த கதையை சரியாக தட்டி தூக்கி நடித்து வருகிறார் அந்த படங்களும் வெளிவந்து வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுகின்றன.
அந்த வகையில் சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது இந்த இரண்டு படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்த பிரின்ஸ் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றியை ருசிக்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு..
ஆனால் படம் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது படத்தை பெரிய அளவில் ரசிகர்கள் எதிர்பார்த்தாலும் படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று சுமாரான வசூலையே அள்ளியது. இந்த படம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் இந்த படம் ரிலீஸ் ஆகும் பொழுது இணையதளத்தில் எதிர்மறையான கருத்துக்கள் வெளிவந்துள்ளன..
இதை உணர்ந்த சிவகார்த்திகேயன் இணையதளத்தில் இப்படி யார் பண்ணுன வேலையென தெரிந்து கொள்ள அவரும் ஒரு பக்கம் விசாரணை நடத்தி உள்ளார் பிறகு பார்க்கும்பொழுது தான் தெரிகிறது சிவகார்த்திகேயன் உடன் நெருங்கிய வட்டாரத்தில் இருந்த சிலரே இணையதள பக்கத்தில் படத்தைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்களை போட்டுள்ளனர் சிவகார்த்திகேயன் வளர்ச்சி அவரது கூட இருப்பவர்களுக்கே சுத்தமாக பிடிக்கவில்லையாம்..
சிவகார்த்திகேயன் அந்த ஆளை கண்டுபிடித்தாலும் அதை வெளியே சொல்லாமல் அந்த கூட்டத்திற்கு தக்க பதிலடி கொடுக்க அடுத்த படத்தை வெற்றி படமாக கொடுக்க முனைப்பு காட்டி வருகிறாராம் சிவகார்த்திகேயன். அவர் அடுத்ததாக மாவீரன் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வந்தார் ஆனால் தற்பொழுது அதன் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.