AK 62 வாய்ப்பு பறிபோக முக்கிய காரணம் இவங்க தான்.? அஜித்தால் எந்த பிரச்சனையும் இல்லை.. விக்னேஷ் சிவன் பேச்சு

ajith
ajith

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இவர் கடைசியாக விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர்களை வைத்து எடுத்த திரைப்படம் காத்து வாங்குல ரெண்டு காதல்.. இந்த படம் முழுக்க முழுக்க காதல், காமெடி சம்பந்தப்பட்டதாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது.

இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்துடன் கைகோர்த்து AK 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என தகவல்கள் எல்லாம் பெரிய அளவில் பரவின ஆனால் கடைசி நேரத்தில் கைமேறி போனது இதனை எடுத்து ஏ கே 62 படத்தை மகிழ் திருன்மேனி இயக்க உள்ளதாக தகவல்கள் கசிகின்றன. அதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை..

இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது அவரிடம் அஜித் பற்றியும் அடுத்து நீங்கள் எடுக்கப் போகும் படம் பற்றியும் கேட்டுள்ளனர்.. விக்னேஷ் சிவன் சொன்னது என்னவென்றால்.. ஏகே 62 பட வாய்ப்பு பறிபோனது வருத்தம் தான் இருந்தாலும் அது மகிழ் திருமேனி மாதிரி ஒருவருக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி..

ஒரு அஜித் ரசிகனாக படத்தை காண ஆவலுடன் இருக்கிறேன். ஏகே 62 வை பொறுத்தவரை அஜித் சார் பக்கம் எந்த பிரச்சனையும் இல்லை.. தயாரிப்பு தரப்பு தான் இரண்டாம் பாதி கதை பிடிக்கவில்லை சொன்னது அதனால் தான். கைநழுவி போனது என கூறியுள்ளார் மேலும்.. பேசிய அவர் தன்னுடைய அடுத்த படத்திற்காக..

பிரதீப் ரங்கநாதரை வைத்து படம் இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தானாக சேர்ந்த கூட்டம் படத்திற்கு முன் தான் எழுதிய ஆப் சம்பந்தப்பட்ட கதையைத்தான் அடுத்த படமாக எடுக்க உள்ளதாகவும் கூறினார் இந்த படத்தை கமலஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.