என் வாழ்க்கையே இவங்க தான்..! தனுஷ் யாரை பார்த்து சொன்னார் தெரியுமா.?

dhanush
dhanush

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜகமே தந்திரம், மாறன் போன்ற திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்திற்கு சென்றது. இருந்தும் படம் சுமாரான வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வியை சரி செய்ய தனுஷ் அடுத்தடுத்து சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து நடித்த வருகிறார்.

அப்படி தனுஷ் கேரியரில் மிக முக்கிய படமாக பார்க்கப்பட்ட யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், குட்டி போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் உடன் இணைந்து தற்போது திருச்சிற்றம்பலம் என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா போன்ற முக்கிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக அரங்கேறியது. அதில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர் இயக்குனர் இசையமைப்பாளர் போன்ற பலரும் கலந்து கொண்டனர்.

அந்த விழாவின் மேடையில் நடிகர்கள் இயக்குனர்கள் போன்ற பலரும் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதில் தனுஷ் பேசிய வீடியோ ஒன்று அவரது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் தனுஷ் பேசியது என்ன வந்தாலும் பரவாயில்லை, நீ தனியாள் இல்லை, உன் கூட நாங்க இருக்கிறோம் எனத் தோளோடு தோல் சேர்ந்து நிற்கின்றனர்.

எனது ரசிகர்கள் இதனை நான் மறக்க மாட்டேன் எண்ணம் போல் வாழ்க்கை எண்ணம் போல் மட்டும் தான் வாழ்க்கை என் எண்ணம் என் ரசிகர்கள் தான் என பேசி உள்ளார் இதைக் கேட்ட தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி இந்த செய்தியை கொண்டாடி வருகின்றனர்.