பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் தேவர்மகன் 2 – கமலுடன் மீண்டும் இணையும் “விக்ரம் பட நடிகர்”.?

kamal
kamal

நீண்ட இடை வேலைக்கு பிறகு உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் திரைப்படத்தில் நடித்து அசத்தினார். படம் நல்ல வரவேற்பை பெற்று சிறப்பாக ஓடி கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது அதன் காரணமாக நல்ல வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது இது வரை மட்டுமே சுமார் 350 கோடி.

வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தை வேற லெவலில் தரமாக எடுத்திருந்தார் லோகேஷ். இந்த திரைப்படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2, தேவர் மகன் 2 போன்ற படங்களில் நடிக்க உள்ளார் முதலாவதாக தேவர் மகன் 2 பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

கமலஹாசன் 1992 ஆம் ஆண்டு தேவர் மகன் படத்தில் நடித்தார் . அவருடன் இணைந்து சிவாஜி, நாசர், ரேவதி, கௌதமி, வடிவேலு என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர் இந்த படம் அப்பொழுது வெளியாகி சுமார் 175 நாட்கள் ஓடி அசத்தியது. உடனே இதன் இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் நீண்ட வருடங்களாக இது பற்றிய பேச்சாமல்  இருந்த வந்த நிலையில் கமலஹாசன் தற்போது தூசு தட்ட ஆரம்பித்துள்ளாராம் தேவர்மகன்-2 திரைப்படத்தை நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் இன்னொரு முக்கிய ஹீரோ நடிக்க இருப்பதாக தற்போது பேசப்பட்டு வருகிறது.

fahadh fashil
fahadh fashil

விக்ரம் படத்தில் கமல் எப்படி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினாரோ அதேபோல விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா போன்றவர்களும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் குறிப்பாக பகத் பாசில் நடிப்பு அற்புதம் அவர் தான் தேவர்மகன் 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

.