திரை உலகில் ஒரு நடிகையை அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்திய ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் திசைதிருப்பதுன் ஒன்றும் சாதாரண விசயம் அல்ல ஆனால் அதை பல வருடங்களாக செய்து காட்டி வருபவர் தான் நடிகை கங்கனா ரனாவத்.
படத்தின் கதைக்கு ஏற்றபடி கவர்ச்சியை காட்டுவதும் கதைக்கு ஏற்றபடி தனது நடிப்புத் திறமையும் மாற்றிக்கொள்வது இவருக்கு கைவந்த கலை. தொடர்ந்து ஹிந்தியில் பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்ததால் தற்போது இவருக்கு மிகப்பெரிய ஒரு மார்க்கெட் இருக்கிறது.
இருப்பினும் ஹிந்தி சினிமாவையும் தாண்டி தற்போது அனைத்து மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார். தற்பொழுது இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான தலைவி திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தை எதிர்நோக்கி தற்போது தமிழ்நாட்டு ரசிகர்களும் மக்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த படம் நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத் சமீபத்திய பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவுலகில் எந்த உச்ச நட்சத்திரத்துடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கங்கனா ரணாவத் தமிழ் சினிமாவில் விஜய் சார் இங்கு அல்டிமேட் ஹீரோவாக இருப்பதால் அவருடனும் நடிக்க ஆசை மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனும் பணிபுரிய மிக ஆவலுடன் இருப்பதாக கூறினார்.
கங்கனா ரனாவத் இவ்வாறு கூறியிருப்பது தற்போது ரஜினி மன்றம் தளபதி ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது சமூகவலைதளத்தில் இந்த செய்தியை வேற லெவல் கொண்டாடி வருகின்றனர்.