இவங்க ரெண்டு பேரும் தான் எனக்கு குருநாதர்கள்.. இவங்க இல்லன்னா சினிமாவில் நான் இல்லை.. வடிவேலு யாரைப் பற்றி பேசி உள்ளார் தெரியுமா.?

vadivelu
vadivelu

வைகை புயல் வடிவேலு 90 கால கட்டங்களில் இருந்து எப்பொழுது வரையிலும் தொடர்ந்து தனது சிறப்பான காமெடியை கொடுத்து அசதி வருகிறார் இவர் இதுவரை தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் விஜய் ரஜினி கமல் சூர்யா என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து காமெடியனாக நடித்துள்ளார்.

அதேசமயம் காமெடியன் என்ற அந்தஸ்தையும் தாண்டி முக்கிய மற்றும் சில ஹீரோவாகவும் நடித்து வெற்றி கண்டுள்ளார் வடிவேலு இவர் ஹீரோவாக நடித்த இந்திரலோகத்தில் நான் அழகப்பன், 23ஆம் புலிகேசி, தெனாலிராமன் போன்ற படங்கள் வெற்றி படங்களாக தான் இருந்தன.

இப்படி வாழ்க்கையிலும், சினிமாவிலும் சிறப்பாக ஓடிய வடிவேலுக்கு சரியான நேரம் பார்த்து அவர் சினிமா உலகில் நடிக்க கூடாது என தடை போட்டது இதனால் கடந்த நான்கு வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு ஒரு வழியாக அந்த பிரச்சனையில் இருந்து வெளிவந்து தற்பொழுது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

அதுவும் ஹீரோ காமெடியனாக வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம் முதலாவதாக இவர் நடிப்பில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதில் ஒரு கேள்வியும் கேட்கப்பட்டது.

அதாவது உங்களுக்கு சினிமாவில் யார் குரு என கேட்டுள்ளனர் அதற்கு வடிவேலு சற்றும் யோசிக்காமல் என்னை சினிமா உலகில் அறிமுகப்படுத்திய ராஜ்கிரன் தான் எனக்கு குரு என கூறினார் மேலும் தேவர்மகன் படத்தில் நடிக்கும் பொழுது சினிமா எப்படிப்பட்டது எப்படி இருக்க வேண்டும் என்பதை எனக்கு சொல்லிக் கொடுத்தவர் கமல் அவரும் எனக்கு குரு தான் என கூறினார்.