அண்மைக்காலமாக பெரிதும் டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றி இளம் இயக்குனர்கள் தான் தமிழ் சினிமாவில் ஆட்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் இளம் இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்னும் ஹிட் படத்தை கொடுத்து அறிமுகமானார்.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த டாப் நடிகர்களுடன் கைகோர்த்து கைதி, மாஸ்டர் மற்றும் கடைசியாக கமலுடன் இணைந்து விக்ரம் எனும் படத்தையும் கொடுத்திருந்தார். இதுவரை தமிழில் இவர் இயக்கிய நான்கு படங்களுமே பிளாக்பஸ்டர் மூவிகளாக அமைந்ததால் லோகேஷ் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்து காணப்படுகிறார். மேலும் பல நடிகர்களும் லோகேஷ் உடன் இணைய ஆசை தெரிவித்து வருகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் லோகேஷ் அடுத்ததாக தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி லோகேஷ் கூட்டணியில் வெளிவந்த கைதி படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க உள்ளார். மேலும் பல சிறந்த நடிகர்களுக்கும் கதை கூறி வருகிறாராம் லோகேஷ். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய லோகேஷ் தான் இயக்க விரும்பும் ரீமேக் படம் குறித்து பேசி உள்ளார்.
சச்சி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ஐயப்பனும் கோஷியும் படம் அப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது. இந்த படத்திற்காக இயக்குனர் சச்சி தேசிய விருது கூட வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு அந்த படம் ரொம்ப பிடித்ததாகவும் அந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய விருப்பம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்படி அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்தால் சூர்யா மற்றும் கார்த்திக் இருவரையும் நடிக்க வைக்க திட்டம் இருப்பதாகவும் கூறினார். பி ஜி மேனன் நடித்த கதாபாத்திரத்தில் சூர்யாவும் பிரித்விராஜ் சுகுமாரன் நடித்த கதாபாத்திரத்தில் கார்த்தியும் நடித்தால் படம் சிறப்பாக இருக்கும் என தனது வித்தியாசமான ஆசையை தெரிவித்துள்ளார்.