தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அதுவும் முன்பெல்லாம் நடிகைகள் தனது திறமைகளை ஒவ்வொரு படத்தின் மூலமும் வெளிக்காட்டி முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று வருகின்றனர். அதற்கு உதாரணமாக தற்போது தமிழ் சினிமாவில் நயன்தாரா, திரிஷா போன்ற பலரும் பல வருடங்களாக சினிமாவில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சினிமாவில் என்ட்ரி ஆகிய முதல் படத்திலேயே டாப் நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து தனது அழகு மற்றும் திறமையை வெளிப்படுத்தி உச்ச நட்சத்திரமாக இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் நடிகர் பிரியங்கா அருள் மோகன் இவர் எடுத்த உடனே தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து டான் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் .
முதல் படத்திலேயே அவரது நடிப்பு சூப்பராக இருந்ததால் அவருக்கு அதிக ரசிகர்களும் உருவாகினர். இதைத் தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் மற்றும் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது தமிழில் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது ரஜினி மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாக இருக்கும் ஜெயிலர் திரைப்படத்திலும் பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை பிரியங்கா அருள் மோகனிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது
அப்போது பேசிய அவரிடம் உங்களால் எந்த மூன்று விஷயம் இல்லை என்றால் உயிர் வாழ முடியாது எனக்கே கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரியங்கா அருள்முகம் சாப்பாடு தண்ணீர் மற்றும் போன் ஆகிய மூன்றும் இல்லை என்றால் என்னால் உயிர் வாழ முடியாது எனக் கூறியுள்ளார். இவர் கூறிய இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பரவி வருகின்றன.