Nalini : ராமராஜன் என்னை கைவிட்ட போது விஜயகாந்த் சொன்ன வார்த்தைகள் இதுதான்.! கேப்டன்னா சும்மாவா..

nalini
nalini

Nalini : 80 காலகட்டங்களில் டாப் ஹீரோகளின்  படங்களில் நடித்து வெற்றி நடிகையாக ஓடியவர் நளினி.  இவர் ஆரம்பத்தில் மாவீரன் போன்ற படங்களில் நடித்து வந்த நளினிக்கு உஷா படம் தான் சினிமா கேரியரில் மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாக இருந்தது.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களான விஜயகாந்த், ரஜினி போன்ற டாப் நடிகரின் படங்களில் நடித்து பெரிய வெற்றிகளை அள்ளினார். இப்படிப்பட்ட நடிகை நளினி சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கும் போது அவரது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு திறத்தினர்.

ஆனால் அவரது அம்மா அவருக்கு ஆதரவாக நின்றதோடு மட்டுமல்லாமல் சினிமாவில் நடிக்க தூண்டுதலாக இருந்தார். அப்படி சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது நளினிக்கு  நடிகர் ராமராஜன் மீது காதல் வந்தது இந்த காதலுக்கும் நளினி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். ஆனால் எம்ஜிஆர் முன்னிலையில் இவர்களுக்கு கல்யாணம் பெரிய அளவில் நடந்து முடிந்தது.

இவர்கள் இருவருக்கும் இரு குழந்தைகள் இருந்தது. சில கருத்து வேறுபாடுகள் காரணமாக ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்தனர். நளினிக்கு எங்கே போவது யார் நமக்கு ஆதரவு கொடுப்பார் என புலம்பி கொண்டிருந்த நிலையில்   உறுதுணையாக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த் தான்..

கூட பிறக்காத அண்ணன் தங்கையாக கேப்டனும், நளினும் இருந்தனர். அந்த சமயத்தில் அவர் சொன்னது என்னவென்றால்.. உனக்கு நான் இருக்கிறேன்  என்ன வேண்டுமானாலும் கேள் நான் செய்து தருகிறேன் எனக்கூறி  ஆறுதல் செய்தாராம்.. இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பெரிய அளவில் பரவி வருகிறது.