தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் தற்பொழுதும் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருப்பதால் அவரது மார்க்கெட் உச்சத்திலேயே இருக்கிறது. சினிமா உலகில் சிறந்த படங்களை கொடுப்பதால் ரஜினி இந்த இடத்தை பிடிக்கவில்லை அதற்கு சில காரணங்களும் இருக்கிறது.
படங்களில் என்னதான் வெற்றியை கொடுத்தாலும் நல்ல மனிதராக நடந்து கொண்டால் தான் சினிமா தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அந்த வகையில் ரஜினி சினிமாவிலும் சரி நிஜத்திலும் சரி, மரியாதையாகவும் நேர்மையாகவும் இருக்கக்கூடிய ஒரு மனிதர். ரஜினி அண்மையில் கிரியா யோகா மூலம் இனிய வெற்றிக்கர வாழ்வு எனும் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியான நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார் ரஜினி. என்னிடம் பணம் புகழ்பெயர் பெரிய பெரிய அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் என அனைத்தையும் பார்த்த எனக்கு சந்தோஷம் நிம்மதி என்பது 10% கூட இல்லை என கூறினார் வாழ்க்கையில் சந்தோஷம் நிம்மதி நிரந்தரம் கிடையாது சித்தர்களிடம் உள்ள நிம்மதி சந்தோஷம்..
இதுவரை எனக்கு கிடைத்தது இல்லை. என்னையும் பெரிய நடிகர் என்று இங்கு சொன்னார்கள் இது பாராட்டா திட்டா என எனக்கு தெரியவில்லை. நான் இதுவரை சினிமா உலகில் பல படங்களில் நடித்துள்ளேன் ஆனால் எனது மனதை கவர்ந்த திரைப்படம் என்றால் அது ராகவேந்திரா மற்றும் பாபா ஆகிய இரண்டு திரைப்படங்கள் தான்.
இந்த இரண்டு படங்களை பார்த்த பிறகு தான் மக்கள் ராகவேந்திரா மற்றும் பாபா பற்றி நிறைய பேசினார்கள். பாபா படத்திற்கு பிறகு நிறைய பேர் இமயமலைக்கு போனதாகவும் சொல்லி உள்ளனர் என்னுடைய ரசிகர்கள் இந்த இயக்கத்தில் சன்னியாசியாக மாறி உள்ளனர் ஆனால் நான் இன்னும் ஒரு நடிகராக இங்கே இருக்கிறேன். மேலும் தொடர்ந்து பல விஷயங்களை ரஜினி பேசினார்.