சின்னத்திரையில் எப்பொழுதுமே புதிய சீரியல் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சியை நல்லபடியாக நடத்தி வெற்றி கண்டுவிட்டால் அதை அடுத்தடுத்த சீசன் ஆக தொகுத்து வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை 5 சீசன்களை வெற்றிகரமாக..
முடித்த நிலையில் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி பிக் பாஸ் சீசன் 6 செய்யும் வெற்றிகரமாக தொடங்கியது பிக் பாஸ் சீசன் 6 ல் மொத்தம் 20 பேர் போட்டியாளராக கலந்து கொண்டனர். ஆரம்பத்திலேயே இந்த சீசன் பலருக்கும் ரொம்பவும் பிடித்துப் போனது அதற்கு காரணம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தான்.
குறிப்பாக ஜி.பி. முத்து, அமுதவாணன், ரட்சிதா மகாலட்சுமி, ஆயிஷா ஆகியோர்கள் பண்ணும் சேட்டைகள்.. ரசிகர்களையும் தாண்டி மக்களுக்கும் ரொம்ப இது பிடித்து போய் இருக்கிறது ஆதனால் இந்த ஷோ தற்பொழுது களைகட்டி உள்ளது. இப்படி இருந்தாலும் வாரவாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார்.
அந்த வகையில் இந்த வாரம் யார் வெளியே போகிறார் என்பது தெரியவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் சீசன் 6ல் அதிகம் பிரபலமாக இருக்கும் போட்டியாளர் யார் என்பதை ormax நிறுவனம் கணக்கெடுத்து வெளியிட்டுள்ளது அந்த வகையில் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் பிரபலங்களின் லிஸ்ட்டை பார்ப்போம்..
மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் அதிகம் இடம் பிடித்தவர் ஜி பி முத்து இவர் தான் முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் ரட்சிதா மகாலட்சுமி, ஆயிஷா, ஜனனி, அமுதவாணன் ஆகியோர்கள் தாக்குபிடிக்கின்றனர். இதைப் பார்த்த ரசிகர்கள் அப்படி என்றால் இந்த ஐந்து பேரில் ஒருவர் தான் டைட்டில் வின்னர் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Ormax Characters India Loves: Top 5 most popular #BiggBossTamil6 contestants (Oct 9-14)#OrmaxCIL pic.twitter.com/IxqygmVMRV
— Ormax Media (@OrmaxMedia) October 16, 2022