தற்பொழுதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டு சமூக வலைதளத்தில் அதிக ஃபாலோசர்களை வைத்திருக்கும் முதல் 10 நடிகைகளில் லிஸ்ட் தற்பொழுது வெளியாகி உள்ளது. மேலும் ஏராளமான தொலைக்காட்சி நடிகைகள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
தொடர்ந்து இவர்களின் வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் பின் தொடர ஆரம்பித்து விடுகிறார்கள் அந்த வகையில் முதலிடத்தை ஆலியா மானசா பிடித்துள்ளார் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார். பிறகு தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் ஆலியா மானசாவை 4.2 மில்லியன் பாலோசர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.
இரண்டாவது இடத்தினை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் சிவானி நாராயணன் பிடித்துள்ளார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தொடர்ந்து சில திரைப்படங்களிலும் நடித்துவரும் நிலையில் இவரை 3.5 மில்லியன் ஃபாலோசர்கள் பின்பற்றி வருகிறார்கள்.
3வது இடத்தினை தர்ஷா குப்தா பிடித்துள்ளார் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி பிறகு சில சீரியல்களில் வெள்ளி கதாபாத்திரத்திலும் நடித்து வந்த இவர் தற்பொழுது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவர் 2.1 மில்லியன் ஃபாலோசர்களை வைத்துள்ளார்.
நான்காவது இடத்தினை கேப்ரில்லா பிடித்துள்ளார் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2ல் கதாநாயகியாக நடித்து வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார் மேலும் இவரை 1.9 மில்லியன் ஃபாலோசர்கள் பின்பற்றி வருகிறார்கள். இவரைத் தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியல் புகழ் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா ஐந்தாவது இடத்தினை பிடித்துள்ளார். இவரை 1.9 மில்லியன் ரசிகர்கள் பின்பற்றி வருகிறார்கள்.
ஆறாவது இடத்தினை சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்த ரட்சிதா மகாலட்சுமி பிடித்துள்ளார் இவர் தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் நிலையில் இவர் 1.3 மில்லியன் ஃபாலோசர்களை வைத்துள்ளார். 6வது இடத்தினை சைத்ரா ரெட்டி பிடித்துள்ளார் தற்பொழுது இவர் கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்துவரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது இவருக்கு 1.3 மில்லியன் ஃபாலோசர்கள் இருந்து வருகிறார்கள்.
எழாவது இடத்தினை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த காவியா அறிவுமணி பிடித்துள்ளார் இவர் 1.3 மில்லியன் ஃபாலோசர்கள் இருக்கின்றனர். பிறகு பரினா ஆசாத் 1.2 மில்லியன் ஃபாலோசர்களும், ரேஷ்மா பசுபிலிட்டி1.2 மில்லியன் ஃப்லோசர்களும், ஹேமா ஒரு மில்லியன் பாலோசர்களும் பின்பற்றி வருகிறார்கள் இவ்வாறு அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ள இவர்கள் பிடித்துள்ள நிலையில் இந்த பத்து நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுஸ் இருந்து வருகிறது.