தளபதியையும் உதயநிதியையும் கொளுத்திவிட்ட நபர்களே இவர்கள்தான்.! அதனால்தான் பிரிந்தார்கள்…

udhayanidhi stalin-vijay
udhayanidhi stalin-vijay

இந்திய அளவில் நம்பர் ஒன் நடிகராக திகழ்ந்துவரும் நடிகர் விஜய் இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதனை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். மேலும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் ஆன உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனக்கும் விஜய்க்கும் இடையே நடந்த கருத்து வேறுபாடு பற்றி ஒரு பேட்டியில் தெளிவாக கூறியிருக்கிறார். அதாவது குருவி திரைப்படத்திலிருந்து தொடங்கிய இவர்களுடைய பழக்கம் போகப் போக நெருஞ்சி பழக ஆரம்பித்து விட்டனர்.

இது பிடிக்காத ஒரு சிலர் உதயநிதியைப் பற்றி விஜய்யிடம் தவறாக கூறியதாகவும் உதயநிதியிடம் விஜய் பற்றி தவறாக கூறியதாகவும் அந்த பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். இதனால்தான் நானும் விஜய்யும் பிரிந்தோம் என்றும் கூறியிருக்கிறார்.

இப்படியே இவங்களுடைய நட்பு விரிசல் விட ஆரம்பித்தது அதன் பிறகு நீண்ட நாட்கள் கழித்து நடிகர் விஜய்யை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று சந்தித்து இருக்கிறார் அப்போதும் பார்க்கு மறுத்த விஜய்யை கட்டாயப்படுத்தி அவருடன் நான் பேச வேண்டும் என்று கூறி இருக்கிறார். அதன் பின்னர் விஜய்யிடம் பேசிய உதயநிதி இதுதான் நடந்தது என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகு அந்தப் பிரச்சனையை மறந்து விட்டு தற்போது மீண்டும் சகஜமாக பழக ஆரம்பித்து விட்டார் என்று கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது அது மட்டுமல்லாமல் உங்களை இப்படி பிரிக்க நினைத்தவர்கள் யார் என்று பல கேள்விகள் எழுந்து வருகிறது.