These are the movies that have lifted Surya in Tamil cinema: சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானாலும் ரசிகர்களிடையே தற்போது வரை நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
சூர்யா தனது சினிமா வாழ்க்கையில் ஆரம்ப காலகட்டத்தில் கடின உழைப்பால் ஒருசில திரைப்படங்களிலேயே ரசிகர்களை அதிகம் கவர்ந்தார். அதிலும் சினிமா பிரபலங்கள் பலரும் இவருக்கு சுத்தமாக நடிக்க தெரியவே இல்லை என்றும் கூறிவந்தார்கள் என்றே கூறலாம்.
அதற்கு சூர்யா அவர்களுக்கெல்லாம் சவுக்கடி தரும் வகையில் அவரது அடுத்தடுத்த திரைப்படங்களில் மிகவும் அற்புதமாக நடித்து வலம் வந்து கொண்டிருந்தார்.
இந்த விஷயத்தை நடிகர் ரஜினிகாந்த் கூட ஒரு நிகழ்ச்சியில் சூர்யாவைப் பற்றி பேசி இருப்பார்.
மேலும் சூர்யாவின் ஆரம்பகாலகட்ட திரைப் படங்களில் அதிக வசூல் அளித்த திரைப்படங்களின் லிஸ்ட் இதோ.
சூர்யா நடித்த இருந்தா கஜினி என்ற திரைப்படம் திரையரங்குகளில் நன்றாக ஓடியது மட்டுமல்லாமல் ரு,50 கோடியை வசூலித்தது.
அதேபோல் சிங்கம் திரைப்படம் ரு, 75 கோடி வசூல் அளித்தது. இதற்கெல்லாம் ஒருபடி மேலாக சூர்யா நடித்த ஏழாம் அறிவு என்ற திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்றிருந்த இந்த திரைப்படம் ரு,100 கோடி வசூல் அளித்திருந்தது.
இந்த தகவல் எல்லாமே சமீபத்தில் சினிமா வட்டாரத்தில் இருந்து வெளிவந்த தகவலாகும்.