தளபதி விஜய் தனது 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முதல்கட்ட மட்டுமே முடிந்திருந்தாலும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது தாறுமாறாக எகிறியது.
காரணம் படக்குழு உடனுக்கு உடன் சில அப்டேட்டுகளை அள்ளி வீசி வருவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்துவருவதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.
இப்படத்தை முடித்த கையோடு விஜய் தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்க உள்ளதால் தமிழை தாண்டி பிற மொழிகளிலும் நல்ல ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்க சமீபகாலமாக விஜய் பற்றிய செய்திகள் உலா வருகின்றன அந்த வகையில் தளபதி விஜய் சில வருடங்களுக்கு முன்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருந்தார் அப்போது ரசிகர்களுடன் உரையாடுவது அவருக்கு ரொம்ப பிடிக்குமாம் அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டு ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த விஜய் சூப்பரான பதிவை வெளியிட்டுள்ளார்.
இதில் அவர் குறிப்பிட்டுள்ளது எனது ரசிகர்கள் தான் என் தலைவர்கள் என பதிவிட்டு இருந்தார் அந்த பதிவு தற்போது இணையதள பக்கங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
இதோ அந்த பதிவு.