2021 – ல் இந்த திரைப்படங்கள் தான் அதிகம் வசூல் வேட்டை நடத்தியது.! முதலிடத்தில் யார் தெரியுமா

rajini, vijay, ajith
rajini, vijay, ajith

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன ஆனால் அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்துகின்றனர் என்றால் கேள்விக்குறிதான். சிறந்த கதைகளும் மற்றும் டாப் நடிகர்களின் படங்கள் என்றால் அவர்களது ரசிகர்களுக்காகவே ஓடிவிடும்.

அதிலும் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் சொல்லவே வேண்டாம் ரஜினிக்கு வயதானாலும் அவரது ஸ்டைல் நடிப்பு ஆகியவை படத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்வதால் அந்த திரைப்படத்தை ரசிகர்கள் கண்டு களிப்பதால் இவரது திரைப்படம் சும்மாவே 100 கோடியை அல்லுகிறது. அந்த வகையில் 2021ல் மட்டும் அதிகம் வசூல் செய்த படங்கள் எது என்பதைப் பிரித்துப் பார்க்கிறோம்.

அதிலும் குறிப்பாக முதல் ஐந்து இடத்தில் இருக்கும் நடிகரின் படங்கள் எது என்பதை தெள்ள தெளிவாக பார்க்கலாம். தமிழ் சினிமாவில் நாற்பதாண்டுகளாக பயணித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்பவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த தீபாவளியன்று இவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கண்டு தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் இந்த திரைப்படம் மூன்று வாரத்தில்  150 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் வசூல் மன்னனாக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படம்  மூன்று வாரத்தில் 125 கோடி வசூலித்து இந்த இடத்தை பிடித்து உள்ளது.

மூன்றாவது இடத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் வசூலையும் அள்ளியது. இந்த திரைப்படம் மூன்று வாரத்தில் மட்டும் 72.3 கோடி அள்ளி சாதனை படைத்தது.நான்காவது இடத்தில் தனுஷின் கர்ணன் திரைப்படம் இடம் பிடித்தது இந்த திரைப்படம் மூன்று வாரத்தில் மட்டும் சுமார் 52 கோடியையும் சுல்தான் திரைப்படம் ஐந்தாவது இடத்தைப் பிடித்து 23 கோடி 3 வாரத்தில் உள்ளது