அடுத்த வருடம் ஐபிஎல் 15 வது சீசன் வெற்றிகரமாக தொடங்கி இருக்கிறது அதற்கு முன்பாக இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால் மொத்தம் 10 அணிகள் விளையாடக் இருக்கின்றன இதனை அடுத்து புதிய நிபந்தனைகள் அனைத்து அணிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ளது அதாவது ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு அணிகளும் சிறந்த வீரர்களை தற்போது தக்கவைத்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை அணியில் இருக்கும் வீரர்கள் அனைவருமே சிறந்த வீரர்கள் என்பதால் முதல் நான்கு வீரர்களை தக்க வைப்பது என்பது மிகப்பெரிய ஒரு கேள்வி குறியாக இருந்தது தற்போது அதற்கு பதில் அளித்துள்ளது அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் நான்கு வீரர்களாக ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ருத்ராஜ், அலி ஆகியோரை தன்வசப்படுத்தி உள்ளது.
அதிலும் குறிப்பாக தோனியை விட அதிக விலைக்கு ஒரு வீரர் போயுள்ளார் மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முதலாவதாக ரவீந்திர ஜடேஜாவை தான் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஏனென்றால் மகேந்திர சிங் தோனி கடைசியாக சென்னையில் விளையாடும் போட்டியை அவருக்கு கடைசி போட்டி என அறிவித்ததையடுத்து.
அவர் பாதி போட்டியிலேயே விலகி விடுவார் என்ற காரணத்தினால் முதலாவதாக ரவீந்திர ஜடேஜாவை 16 கோடி கொடுத்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. தோனிக்கு பிறகு புதிய கேப்டன்னாக ஜடேஜா செயல் பட வாய்ப்பு.? இரண்டாவதாக தல தோனி 12 கோடி, மூன்றவதாக மோயின் அலி 8 கோடி, ருத்ராஜ் நான்காவது வீராக ரூ 6 கோடி முதல் நான்கு வீரர்களை தன்வசப்படுத்திக் கொண்டு உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போலவே மற்ற அணிகளும்சிறந்த நான்கு வீரர்களை தன்வசப்படுத்திக் கொண்டு மற்ற வீரர்களை ரிலீஸ் செய்து உள்ளது. ஐபிஎல் மெகா ஏலம் ஜனவரி மாதத்தில் தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.