மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக ப்ரோமோஷன் வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது படத்தில நடித்த நடிகர் நடிகைகள்..
தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களுக்கு சென்று ப்ரோமோஷன் செய்து வருகின்றனர் அப்பொழுது படம் குறித்தும், நடிகர் நடிகைகள் என அனைவரது பற்றியும் சொல்லி வருகின்றனர். இதனால் பொன்னியின் செல்வன் படத்திற்கான எதிர்பார்ப்பும் தாறுமாறாக எகிறி உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்துள்ளார்.
தொடர்ந்து பல்வேறு விதமான கேள்விகள் சமீபத்திய பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது அப்பொழுது எதற்கும் அசராமல் பதில் அளித்துக் கொண்டிருந்தார் அப்பொழுது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் என்கின்ற வரலாற்று படத்தில் நடித்து உள்ளீர்கள் இப்பொழுது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருக்கிறீர்கள்.
இந்த இரண்டு படங்களுக்கும் இரண்டு இயக்குனர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று பார்த்திபனிடம் கேட்டனர் அதற்கு அவர் பதில் அளித்தது. இயக்குனர் செல்வராகவன் ஒரு காட்டாரு போன்றவர் அவரை எந்த எல்லைகளுக்குள்ளும் அடக்கி விட முடியாது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் ஒரு டான்ஸ் மாஸ்டர் நடனம் சொல்லி கொடுக்க வந்தால் அதனையே மாற்றி இதுதான்.
தான் என்று அவர்களுக்கு வேறு ஒன்றை செய்து காட்டி அதை நம்பவும் வைத்து விடுவார், நடன இயக்குனர்களுக்கு அப்படி என்றால் நடிகர், நடிகைகளை பற்றி யோசித்துப் பாருங்கள். இயக்குனர் மணிரத்தினம் பொருத்தவரை அவர் ஒரு அட்டவணை போட்டு அதற்குள் இருக்க வேண்டும் என்று நடிகர்களுக்கு அறிவுருத்துவார். இருப்பினும் தனக்கு வேண்டியதை கிடைக்கும் வரை மணிரத்தினம் அவர்கள் விடமாட்டார் என்று பார்த்திபன் கூறினார்.