பொன்னியின் செல்வன் படத்தில் நான் சந்தித்த சவால்கள் இதுதான் – குந்தவை திரிஷா பளீர் பேட்டி.!

trisha-
trisha-

சினிமா உலகில் வரலாற்று கதைக்கு எப்பொழுதுமே நல்ல மாவு சேர்கிறது. அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க மணிரத்தினம் பல தடவை முயற்சி செய்தார் ஆனால் அப்பொழுது அது நடைபெறவில்லை ஒரு வழியாக டாப் தயாரிப்பு நிறுவனங்களை கையில் பிடித்து பொன்னியின் செல்வன்.

நாவலை படமாக எடுத்துள்ளார் அதை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார். முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாக படக்குழு சென்னை பிரஸ்மீட் வைத்து செய்தியாளர்களை சந்தித்து வருகிறது. அதில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குனர் என பலரும் கலந்து கொண்டனர்.

அப்பொழுது நடிகை திரிஷாவிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக இந்த படத்தில் உங்களுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது எது என கேட்டுள்ளனர் அதற்கு பதில் அளித்த அவர் இந்த படத்தில் நான் நடித்தது எனக்கு ரொம்பவும் சந்தோஷம். இந்த படம் தமிழையும் தாண்டி செந்தமிழில் பேச வேண்டியதாக இருந்தது.

செந்தமிழில் பேசுவது ரொம்ப கஷ்டமாக இருந்தது ஆரம்பத்தில் வாயிலேயே சரியாக வரவில்லை பின்னர் நாங்கள் பேசிப் பேசி பழகிக் கொண்டோம் அதன் பின் படத்தில் சூப்பராக நடித்து விட்டோம் படம் நல்லபடியாக வந்திருக்கிறது என கூறினார் இந்த படத்தில் நடிகை திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதாவது பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் விக்ரமுக்கு தங்கையாகவும், அருள் மொழிவர்மன் ஜெயம் ரவிக்கு அக்காவாகவும் திரிஷா நடித்துள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படம் அவருக்கு ஒரு ஸ்பெஷலான படமாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.