சர்ச்சை பிரபலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஜய் டிவி.! பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் இவர்கள்தான்..

bigg boss 7
bigg boss 7

Bigg Boss 7:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வெற்றிகரமாக ஆண்டுதோறும் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். கடந்த ஆறு சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்ற முடிந்த நிலையில் 7வது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது.

6 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமலஹாசன் அவர்கள் தான் 7வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். ஆனால் இந்த சீசனில் பல கோடி அதிகமாக தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான பிரபலங்கள் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்து இருந்தாலும் அதே நேரத்தில் இதனால் தனது நிம்மதியை இழந்தவர்கள் பலர் இருக்கின்றனர்.

எனவே சமீப காலங்களாக இளம் நடிகர், நடிகைகளின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு தயக்கம் காண்பித்து வருகிறார்கள். இந்நிலையில கடைசியாக நிறைவடை 6வது சீசனின் வெற்றியாளராக ஆசீம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நியாயப்படி விக்ரமன் தான் வெற்றி பெற்று இருக்க வேண்டும் என பலரும் கூறி வந்தார்கள். ஏன் கமல் ஹாசனுக்கே அந்த எண்ணம் இருந்தது.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நியாயம், தர்மம் என பேசிய விக்ரமன் தற்பொழுது தனது மேனேஜரை சில வருடங்களாக காதலித்து ஏமாற்றி இருக்கிறார். இதற்கான முழு ஆதாரத்தையும் அந்த பெண் சோசியல் மீடியாவில் வெளியிட்டு விக்ரமனை மான பங்கம் படுத்தியுள்ளார். இந்நிலையில் 7 சீசன் விரைவில் துவங்க இருக்கும் நிலையில் அதற்கான போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தொகுப்பாளினி ஜாக்குலின், சின்னத்திரை நடிகர் பப்லு, தினேஷ், ரேகா நாயர், ஓட்டுநர் ஷர்மிளா, நடன இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர்கள் கலந்து கொள்வது உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.