“ஜோஸ் பட்லருக்கு” பிடித்த 3 வீரர்கள் இவங்க தானாம்.! இடம் பிடித்த இரண்டு இந்திய வீரர்கள்

Jos buttler
Jos buttler

Jos buttler : இன்றைய கிரிக்கெட் உலகில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது அதிரடி ஆட்டக்காரர்கள் தான் அந்த வகையில் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் பலருக்கும் பிடிக்கும் அவர் தலைமையில் இங்கிலாந்து அணி பல வெற்றிகளை தொடர்ந்து அள்ளி வருகிறது.

வெகு விரைவிலேயே உலககோப்பை நடக்க இருக்கிறது இதில் ஜோஸ் பட்லரின் ஆட்டத்தை பார்க்க பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தனக்கு பிடித்த மூன்று கிரிக்கெட் வீரர்களை பற்றிய ஜோஸ் பட்லர் மனம் திறந்து பேசி உள்ளார் அவர் சொன்னது.

1. இந்தியா அணியின்  கேப்டனும் அதிரடி ஆட்டக்காரருமான ரோகித் சர்மாவை தனக்கு ரொம்ப பிடிக்க வேண்டும் அவருடைய ஃபுல் ஷாட் வேற லெவல். அதில் பவர், டைமிங்  என அனைத்தும் அந்த புல் ஷாட்டில் இருக்கும் என ரோகித் சர்மாவை பற்றி புகழ்ந்து பேசினார்.

2. அடுத்ததாக இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி ஆட்டக்காரருமான ரிஷப் பந்தை பற்றி பேசி உள்ளார்ந்து எப்பொழுதுமே ஆக்ரோசமாக ஆட கூடியவர் அவர் எந்த அணிக்கு எதிராக விளையாண்டாலும் அதிரடி ஆட்ட கூடிய அவர் எதிரணி பவுலர்களுக்கு எப்பொழுதுமே சிம்ம சொப்பனமாக விளங்கக்கூடியவர் ரிஷப் பந்த் அவரது ஆட்டத்தை எப்பொழுதுமே பார்ப்பேன் என கூறினார்.

3. மூன்றாவது வீரர் தென்னாபிரிக்காவை சேர்ந்த துவக்க வீரரும், விக்கெட் கீப்பருமான டி காக் தான்.. ஸ்கொயர் லெக் மற்றும் லெக் திசையில் அசால்டாக சிக்ஸ்  அடிக்க கூடியவர் அவருடைய ஷார்ட் ஒவ்வொன்றும் சிறப்பாக இருக்கும் மிகவும் அபாயகரமான வீரர் என கூறியுள்ளார். இந்த மூன்று வீரர்கள் தான் ஒருநாள்  கிரிக்கெட்டில் ஜோஸ் பட்லருக்கு பிடித்த வீரர்கள்.