சர்ச்சைக்கு பஞ்சமில்லாத போட்டியாளர்களை களத்தில் இறக்கும் பிக்பாஸ் 7.? 18 பேர் இவங்க தான்

Biggboss 7
Biggboss 7

Biggboss 7 : சோசியல் மீடியாவில் தற்போது எந்த பக்கம் திரும்பினாலும் பிக் பாஸ் பற்றிய பேச்சு தான். இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழில் பிக் பாஸுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

இதுவரை ஆறு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் கூடிய விரைவில் 7 வது சீசன் தொடங்கப்பட இருக்கிறது.  மேலும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்சியையும் உலகநாயகன் கமல் தான் தொகுத்து வழங்க உள்ளார். இதற்காக மிகப்பெரிய தொகையை சம்பளமாக வாங்க உள்ளாராம்.

வழக்கத்திற்கு மாறாக இந்த சீசனில் இருக்க போகிறது. பிக்பாஸ் 7 இரண்டு வீடு கான்செப்ட் உருவாக்கப்பட்டு இருக்கிறதாம். இந்த நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ள 18 போட்டியாளர்கள் யார் யார் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது.

அதன்படி மற்ற சீசன்களைப் போல இந்த சீசனிலும் சர்ச்சைக்கு குறை வைக்காத சில போட்டியாளர்களும் களம் இறங்கி இருக்கின்றனர். அவர்களை பற்றி விலாவாரியாக பார்போம்.. 1. அப்பாஸ் – 90’s ஹீரோ  2. சோனியா அகர்வால் 3. ரஞ்சித் செய்தி வாசிப்பாளர் 4. சந்தோஷ் பிரதாப் – நடிகர்  5. தர்ஷா குப்தா – நடிகை..

6. வீஜே பார்வதி 7. ரேகா நாயர் 8. அம்மு அபிராமி 9. வீஜே ரக்சன் 10. ஜாக்குலின் – தொகுப்பாளினி 11. சர்மிளா – பஸ் டிரைவர் 12. பப்ளு – பிரபல நடிகர் 13. விக்னேஷ் – காக்கா முட்டை 14. கல்லூரி ஆகில் 15. நிலா மாடல் 16 தினேஷ் ரக்ஷிதா கணவர் 17 ஸ்ரீதர் மாஸ்டர் 18 ரவிக்குமார் – மாடல்