தமிழ் சினிமா உலகில் நம்பர்-1 ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் இப்போதும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார் இவர் கடைசியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்தார் அதனை தொடர்ந்து நெல்சன் உடன் கைகோர்த்து தனது 169 வது படத்தை எடுப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்.
ரஜினி இப்போது ஹீரோவாக நடித்தாலும் சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். குறிப்பாக ரஜினி ஆரம்பத்தில் வில்லனாக நடித்த படங்கள் ரசிகர்களுக்கு ஃபேவரட்டாக இன்றும் இருந்து வருகின்றன. அதன் பிறகு வில்லனாக நடிக்கவில்லை.
தொடர்ந்து ஹீரோவாக இவர் நடித்தாலும் இவரது படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர்களைப் பார்த்து வியந்து போய் இருக்கின்றார். அந்த வகையில் ரஜினிக்கு பிடித்த முதல் இரண்டு வில்லன்கள் யார் என்பதை தற்போது விலாவாரியாக பார்ப்போம். ரஜினியின் நெருங்கிய நண்பராக சினிமாவுலகில் தொடர்ந்து ஹீரோ வில்லனாக மிரட்டி வந்தவர் ரகுவரன்.
இவர் ரஜினியின் பல்வேறு படங்களில் வில்லனாக மிரட்டி உள்ளார் குறிப்பாக பாட்ஷா படத்தில் ரஜினிக்கு நிகராக மாஸ் டயலாக், பாடி லாங்குவேஜ் போன்றவற்றில் பின்னி பெடலெடுத்து உள்ளார் இதை பார்த்து ரஜினியே பூரிப்படைந்து போனாராம் இவரைப்போலவே ரஜினியை வில்ல தனத்தில் மிரட்டியவர் ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தில் ரஜினிக்கு நிகராக திமிரு தனம் கோபமாக பேசுவது போன்றவற்றில் ரஜினிக்கு சமமாக ரம்யா கிருஷ்ணன் பேசிய மிரள விட்டு இருப்பார்.
ரஜினி கூட ஒரு பேட்டியில் ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தில் வில்லியாக மிரட்டியது எனக்கு ரொம்ப பிடித்து போய் இருந்தது என கூறினார். வில்லத்தனத்தில் ரஜினியையே வியக்க வைத்த நடிகர்களின் முதன்மையாக இருப்பது ரகுவரன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் தானாம்.