எம்ஜிஆர் நடித்ததிலேயே அவருக்கு ரொம்பவும் பிடித்த இரண்டு படம் இதுதான்.?

MGR-
MGR-

50,70 களில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் எம் ஜி ஆர். இவர் முதலில் நாடகங்களில் நடித்து தனது திறமையை வளர்த்துக் கொண்டு பின் படிப்படியாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி சினிமாவில் அடி எடுத்து வைத்தார் முதலில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த எம்ஜிஆர் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.

அன்றிலிருந்து இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. 1978 வரை பல படங்களில் நடித்த எம்ஜிஆர் அதன் பிறகு நடிக்காமல் சினிமாவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகினார். இப்படிப்பட்ட எம்ஜிஆர் அவருடைய நடிப்பில் பெரிய அளவில் பேசப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, உலகம் சுற்றும் வாலிபன் என சொல்லிக்கொண்டு போகலாம்..

இருந்தாலும் அவருக்கு ரொம்ப பிடித்த இரண்டு திரைப்படங்கள் என்ன என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு ரொம்பவும் பிடித்தது என் தங்கை மற்றொன்று பெற்றால் தான் பிள்ளையா ஆகிய இரண்டு படங்கள் தான் அவருக்கு ரொம்ப பிடித்த படங்கள் என் தங்கை படத்தில் எம்ஜிஆர் குடும்பத்தைக் காப்பாற்றும்..

ஒரு பொறுப்புள்ள நபராக எம்.ஜி.ஆர் நடித்திருப்பார் இந்த படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது இந்த படம் 1952 ல் வெளிவந்தது. பெற்றால் தான் பிள்ளை படத்தில் எம்ஜிஆரின் நடிப்பு வித்தியாசமாக இருக்கும் இந்த படத்தில் அவருடைய மாறுபட்ட நடிப்பை பார்க்க முடியும்..

செல்ல கிளியே மெல்ல பேசு பாடலில் எம்ஜிஆர் மிகவும் தத்துரூபாக நடித்திருப்பார் இந்த படம் சார்லி சாப்ளின் நடித்த the kid படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது இந்த படம் 1966 ஆம் ஆண்டு வெளியானது. இந்த தகவல் தற்பொழுது எம்ஜிஆர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.