சினிமா உலகம் அசுர வளர்ச்சியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதால் காலத்திற்கு ஏற்றவாறு படங்களும் தற்போது மாறுகின்றன. இளம் இயக்குனர்கள் அதை சரியாக புரிந்து வைத்துக்கொண்டு வலம் வருகின்றனர்.
சமிப காலமாக பல திரைப்படங்கள் வெளிவந்து மக்களை வியக்க வைத்துள்ளது காரணம் காதல், சண்டை போன்ற காட்சிகள் பெரிதும் இல்லாமல் வித்தியாசமான கதைக்களத்தை இயக்குனர்களும் தற்போது உருவாகி உள்ளதால் சினிமா அடுத்த லெவலுக்கு சென்று கொண்டு இருக்கிறது.
மேலும் படத்தை ஹெச்டி தரத்திலும் ரசிகர்களுக்கு ஏற்றபடி படத்தை கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் துணை இயக்குனராக அறிமுகமாகி பின் இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்ற உடன் டாப் ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கும் அளவிற்கு முன்னேறினார்.
தமிழில் இவர் ஆர்யா, விஜய் போன்ற ஜாம்பவான்களை வைத்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் இவர் கடைசியாக விஜயை வைத்து “பிகில்” என்ற ஒரு வெற்றிப்படத்தை கொடுத்த இந்த படம் வசூல் ரீதியாக வேற ஒரு கலெக்ஷனை பெற்றது.
இதற்கு அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஒரு புதிய படத்தை எடுக்கயுள்ளார். இதற்காக நடிகை நயன்தாராவை ஹீரோயினாக தேர்ந்தெடுத்து உள்ளதாக தகவல்கள் கசிகின்றன. இந்த நிலையில் அட்லி அஜித் குறித்து பேசிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு அட்லீ டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர் அஜித் பற்றி கேட்க அவருக்கு அதற்கு பதில் அளித்தார் அஜித் அவர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது அவர் சமீபத்தில் நடித்த படங்களில் விசுவாசம் மற்றும் நேர்கொண்டபார்வை படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என பதிவிட்டார்.