தீபாவளி ரேசில் களமிறங்கும் 8 படங்கள்.. சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக கெத்து காட்டும் கவின்

kavin-sivakarthikeyan
kavin-sivakarthikeyan

கடந்த சில மாதங்களாகவே டாப் ஹீரோக்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட விஜய் நடிப்பில் கோட், சூப்பர் ஸ்டாரின் வேட்டையன், விக்ரமின் தங்கலான், தனுஷின் ராயன் என படங்கள் வெளியாகி கவனம் பெற்றது.

அதை அடுத்து தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் இந்த வருடம் இந்தியா முழுவதிலும் கிட்டத்தட்ட எட்டு படங்கள் வெளியாகிறது. அதில் எந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது குறித்து இங்கு காண்போம்.

அமரன்: கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்துள்ளனர். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறாக உருவாகி இருக்கும் இப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரதர்: சிவா மனசுல சக்தி புகழ் ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவி பிரியங்கா மோகன் இணைந்து நடித்துள்ளனர். கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் உருவாகி இருக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. தற்போது ஜெயம் ரவி தமிழ்நாடு முழுவதும் படு பிஸியாக படத்தை பிரமோஷன் செய்து வருகிறார்.

ப்ளடி பெக்கர்: நெல்சன் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் கவின் இப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் தலைப்புக்கு ஏற்ப பிச்சைக்காரராக அவர் நடித்திருப்பதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தீபாவளிக்கு இப்படமும் வெளியாவது மீடியாக்களின் கவனத்தை பெற்றுள்ளது.

ஜீப்ரா: ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தில் சத்யராஜ், ப்ரியா பவானி சங்கர், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

லக்கி பாஸ்கர்: வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் தெலுங்கு மொழியில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

கா: சுதீப் மற்றும் சுஜித் இயக்கியுள்ள இப்படம் தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கிறது. கிரண் அப்பாவரம் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நயன் சரிகா, தன்வி ராம் என இரு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். தீபாவளிக்கு படம் வெளியாகிறது.

பகீரா: டி ஆர் சூரி இயக்கியுள்ள கன்னட படமான இதில் பிரகாஷ்ராஜ், ருக்மணி வசந்த்,, ஸ்ரீ முரளி ஆகியோர் நடித்துள்ளனர். தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இப்படத்திற்கும் கன்னட திரையுலகில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

பூல் பூலைய்யா 3: ஹிந்தியில் வெளியான இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அனீஸ் பஸ்மி இயக்கத்தில் கார்த்திக் ஆர் யன் நடித்துள்ள இப்படமும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது.

இப்படியாக இந்த எட்டு படங்கள் பண்டிகைக்கு வெளியாகிறது. இதில் எந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கும் என்பது இன்னும் சில வாரங்களில் தெரியவரும்.