சினிமாவுலகில் நடிகர் நடிகைகள் உச்சத்தை தொட அவரது திரைப்படங்கள் ஒரு காரணமாக இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீண்ட காலமாக நிற்க காரணம் ஏதாவது ஒரு படத்தில் அவரது அசாதரணமான நடிப்பு வெளிப்பட்டிருக்கும் அதை மக்கள் மனதிலும் ரசிகர்கள் மனதிலும் நீங்க இடத்தைப் பிடித்திருக்கும்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு கதாபாத்திரத்தின் நடிப்பு நடிகர் நடிகைகளை பற்றி இன்றளவும் பேசிக்கொண்டிருப்பார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு சில கதாபாத்திரங்கள் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன அந்த படங்களின் லிஸ்ட் மற்றும் எந்த ஹீரோ, ஹீரோயின் யார் என்பதை தற்போது பார்ப்போம்.
1. விஜய் நடிப்பில் தரணி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கில்லி இந்த திரைப்படத்தில் விஜய் திரிஷாவின் நடிப்பு அபாரமாக இருந்தாலும் அவர்களையும் ஓவர்டேக் செய்து தனது அழுத்தமான நடிப்பை வெளிக்காட்டி இருந்தவர் வில்லன் பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் முத்துப்பாண்டி ஆக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார்.
இவரது நடிப்பு இந்த படத்தில் இருந்து தற்போது வரையிலும் இதன் தாக்கம் இருந்து வருகிறது.
2. பிரசாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் வின்னர் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து பல டாப் நடிகர்கள் நடித்த இருப்பினும் இவர்களை எல்லாம் அந்த படத்தில் ஓவர்டேக் செய்து விட்டு தனது காமெடியை வெளிப்படுத்தி மக்களை மகிழ்வித்தவர் காமெடி நடிகர் வடிவேலு இந்த திரைப்படம் நீண்ட நாட்கள் ஓடியதற்கு இவரது காமெடி முக்கிய காரணம் என்பது குறிப்பிடதக்கது.
3. மாதவன் மற்றும் சூர்யா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் ஆயுத எழுத்து.
இந்த திரைப்படத்தை மணிரத்தனம் எடுத்திருந்தார் இந்த திரைப்படத்தில் மாதவன் நடிப்பு மிகப்பெரிய அளவில் இருந்தாலும் சூர்யாவின் மாறுபட்ட நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது இந்த திரைப்படம் வெற்றி பெறுவதற்கு சூர்யா நடிப்பே முக்கிய காரணம் என பலரும் கூறுகின்றனர்.
4. ஜெயம் ரவி மற்றும் ஜெனிலியா நடிப்பில் காதல் மற்றும் குடும்பம் கலந்த படமாக உருவானது சந்தோஷ் சுப்பிரமணியம் இந்த திரைப்படம் தற்பொழுதும் பலருக்கும் பிடித்த படமாக இருக்கிறது காரணம் ஜெனிலியாவின் வெகுளித்தனமான நடிப்பே.
5. ராஜமௌலி இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம் பாகுபலி இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் பிரபாஸ் போன்ற பலரும் முக்கியமான ரோலில் எடுத்து நடித்து இருந்தாலும் அதில் வரும் கட்டப்பா கேரக்டரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால் படத்திற்கு முக்கிய பலம் சேர்த்தது மேலும் இவரது நடிப்பு தற்போது வரையிலும் பேசப்பட்டு வருகிறது.
6. ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான திரைப்படம் தனி ஒருவன் இந்த திரைப்படம் மக்களுக்கு தற்போது வரையிலும் ஃபேவரிட் திரைப்படமாக இருக்கிறது ஏனென்றால் படம் விறுவிறுப்பாகவும் அதேசமயம் அடுத்து என்ன நடக்கும் என்பதுமாக இருப்பதால் படம் வேற லெவல் இருக்கும் இந்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி கேரியரில் பெஸ்ட் படமாக் இருப்பதோடு பெஸ்ட் ரீஎன்ட்ரீ படமாகவும் இருந்தது.
7. சமுதிரகணி இயக்கி நடித்த திரைப்படம் சாட்டையை இந்த திரைப்படம் பள்ளி மாணவர்கள் தொடங்கி பெருகிவரும் வெகுவாக கவர்ந்தது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி இன்று மிக முக்கியம் வாய்ந்ததாக இருந்ததால் படம் நல்ல வரவேற்பை மக்களிடையே பெற்றது.