தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என அன்போடு அழைக்கப்படுபவர் இயக்குனர் சங்கர். இவர் திரைப்பயணத்தில் இதுவரை 2 தோல்வி திரைப்படங்களை மட்டுமே கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது அவை என்னென்ன என்பதை இங்கே காணலாம்.
இயக்குனர் சங்கர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இவர் இயக்கிய முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதனால் இந்த திரைப்படத்தின் மூலம் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
ஜென்டில்மேன் திரைப்படத்திற்கு பிறகு காதலன் என்ற திரைப்படத்தை இயக்கினார் அந்த திரைப்படமும் வெற்றியில் முடிந்தது அதன் பிறகு உலக நாயகன் கமலஹாசன் அவர்களை வைத்து இந்தியன் திரைப்படத்தை இயக்கினார் அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அதுமட்டுமில்லாமல் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.
மேலும் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகிய ஜீன்ஸ், முதல்வன், 2.0 என தொடர்ந்து வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார் இந்தநிலையில் இடைப்பட்ட காலத்தில் முதன் முதலில் ஒரு தோல்வி திரைப்படத்தை கொடுத்துள்ளார் இவர் இயக்கிய நாயகன் திரைப்படம் தோல்வியை சந்தித்தது அதுமட்டுமில்லாமல் தமிழில் அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய முதல்வன் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது அந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் வெளியாகிய பாய்ஸ் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் கொஞ்சம் படத்தில் முகம் சுளிக்கும் படி காட்சிகள் அமைந்ததால் இந்த திரைப்படம் எதிர் பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை இருந்தாலும் பாய்ஸ் திரைப்படம் இன்று வரை பலருக்கும் பிடித்த திரைப் படமாக அமைந்துவிட்டது.
அந்த வகையில் இந்த இரண்டு திரைப்படங்கள் மட்டுமே சங்கர் அவர்களை யோசிக்க வைத்துவிட்டது அதன்பிறகு இயக்கிய அனைத்து திரைப்படங்களும் வெற்றி திரைப்படமாக மாறியதற்கு காரணம் இந்தப் இரண்டு திரைப்படங்களின் தோல்வியால் அதிகம் யோசித்ததாக பல பேட்டிகளில் சங்கரின் துணை இயக்குனர்கள் கூறியுள்ளார்கள்.