World Cup 2023 : இந்திய அணி உலக கோப்பை போட்டிகளில் விளையாட ரெடியாகி வருகிறது இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பல பரிட்சை நடத்த உள்ளன இரண்டு அணிகளுமே பலவாய்ந்த அணிகள் என்பதால் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான சுனில் கவாஸ்கர் இந்தியா ஆஸ்திரேலியா அணியுடன் போட்டியில் இந்தியா இந்த 11 பேருடன் போனால் ஆஸ்திரேலிய அணியை ஈசியாக அடித்து விட்டு வரலாம் என்பது போல கூறியுள்ளார்.
அவர் தேர்ந்தெடுத்துள்ள லெவனில் யார் யார் இருக்கிறார் என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கில்லை தேர்வு செய்துள்ளார் சுனில் கபாஸ்கர் மிடில் ஆர்டரில் வீராட் கோலி ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்துள்ளார். ஐந்தாவது வீரராக கே எல் ராகுலை தேர்வு செய்துள்ளார்.
ஆல் ரவுண்டரில் ஹார்டிக் பாண்டியா ரவீந்திர மற்றும் ஜடேஜாவை தேர்வு செய்துள்ளார் பந்துவீச்சில் குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது சமி, பும்ரா ஆகிய வர்களை தேர்வு செய்துள்ளார். இவருடைய லிஸ்ட்டில்அஸ்வின், இஷான் கிஷன், சூர்யா குமார் யாதவ் ஆகியவர்கள் இடம் பிடிக்கவில்லை.

சுனில் கவாஸ்கர் சொன்ன ஆடும் லேவெனில் சுமன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முஹம்மது சிராஜ், முகமது சமி, பும்ரா போன்றவர்கள் இருக்கின்றனர் இந்த வீரர்களை வைத்து ஆஸ்திரேலியாவை அடித்து விடலாம் என்ற கணக்கில் கவாஸ்கர் சொல்லியிருக்கிறார்.