இயக்குனர் ஹெச் வினோத் தமிழ் சினிமா உலகில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் இவர் கடைசியாக நடிகர் அஜித்தை வைத்து வலிமை படத்தை எடுத்தார் அந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூலில் பட்டையை கிளப்பியது அதனைத் தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் கைகோர்த்து துணிவு என்னும் படத்தை எடுத்துள்ளார்.
இந்த படத்தில் அஜித் செம மாஸாக அதேசமயம் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் அஜித் உடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
மேலும் பிக் பாஸ் பிரபலங்களான சிபி, அமீர் போன்றவர்களும் நடித்திருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. துணிவு படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த படத்தை எதிர்த்து விஜயின் படம் வெளி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு படத்தின் இயக்குனர் ஹச். வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க அயோக்கியர்களின் ஆட்டம் நிறைந்த ஒரு படமாக இருக்கும்.. அதனால் இது மங்காத்தா 2 என நினைத்துக் கொள்ளாதீர்கள்.. மேலும் இது வலிமை படம் போலவும் இருக்காது.
வலிமை படத்தில் செய்த தவறுகளை கண்டறிந்து துணிவு திரைப்படத்தை எடுத்திருக்கிறோம் என கூறினார். இந்த படத்திலேயேயும் ஹீரோயின் கிடையாது இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் தான் மஞ்சு வாரியர் நடிக்கிறார் என கூறி முடித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.