தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி நடித்து அசத்தி வருபவர் நடிகை காயத்ரி சங்கர் இவர் ரம்மி படத்தில் நடித்து அறிமுகமானார் அதன்பின் இவர் பொன் மாலை பொழுது, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இப்பொழுது விக்ரம் திரைப்படத்திலும் நடித்து அசத்தியுள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பகத் பாசிலுக்கு மனைவியாக காயத்ரி சங்கர் நடித்திருந்தார் இதில் அவர் வரும் சீன்களில் சிறப்பாக இருந்தது. இந்த படத்தில் கடைசியாக விஜய் சேதுபதி கையால் அவர் இறந்துவிடுவார்.
காயத்ரி சங்கர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் மாமனிதன் படத்தில் நடிக்கிறார் அதனை தொடர்ந்து பெயரிடப்படாத ஓரிரு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் காயத்ரி சங்கர் சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது காயத்ரி சங்கர் என்பது உங்களுடைய உண்மையான பெயர் அல்லது புனைப்பெயர் என கேட்டனர் அதற்கு அவர் பதிலளித்து என்னுடைய உண்மையான பெயர் இதுதான் ஆனால் நான் சினிமாவுக்கு வந்தபோது வேதா என பெயர் மாற்றி கொண்டேன் என்னை ஒரு சிலர் என்னை அப்படி அழைப்பது வழக்கம் என கூறினார்.
மேலும் அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் எழுப்புவது அப்போது விக்ரம் படத்தில் உங்களுக்கு எதுவும் பாடல்கள் காட்சிகள் எதுவும் இல்லையா என கேட்டனர். ஒரே ஒரு பாடல் காட்சியை நானும் பகத் பாசிலும் நன்றாக ஆடுவது போல் இருந்தது ஆனால் படத்தின் நீளம் காரணமாக அந்த காட்சிகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். அந்த பாடல் மிக அருமையாக வந்திருந்தது என தெரிவித்தார்.