இளம் இயக்குனர்கள் மத்தியில் இப்படி ஒரு டீல் இருக்கா.. வேற மாதிரி சம்பவம் செய்யும் கார்த்திக் சுப்புராஜ் vs லோகேஷ் கனகராஜ்.

directors
directors

இளம் இயக்குனர்கள் அண்மைகாலமாக டாப் ஹீரோக்களை வைத்து படங்களை எடுத்து தன்னை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொள்கின்றனர். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் ஆரம்பத்தில் இளம் ஹீரோக்களை வைத்து படங்களை பண்ணினாலும் ஒரு கட்டத்தில் தனக்கு பிடித்த நடிகரான ரஜினியை வைத்து பேட்ட என்னும் படத்தை இயக்கி வெற்றி கண்டார்.

அதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் விக்ரமை மஹான் ஒரு படத்தை இயக்கினார் இப்பொழுது சார்லி 777 என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.  அடுத்ததாக இவர் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் பண்ண அதிகம் ஆர்வம் காட்டுவார் ஆனால் கமல் பக்கம் போக மாட்டார் என கூறப்படுகிறது.

அதற்கு காரணமும் சொல்லப்படுகிறது அண்மை காலமாக இளம் இயக்குனர்கள் தனக்கு பிடித்த ஹீரோவாக வைத்து படம் பண்ண வேண்டும் என்பதுபோல கூறி வருகின்றனராம் லோகேஷ் கனகராஜ் ஒரு தடவை ரஜினியை வைத்து படம் பண்ண வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஆனால் கார்த்திக் சுப்புராஜ் ரஜினி எனக்கு மிகவும் பிடித்தவர் நான் அவரை வைத்து படம் பண்ணுகிறேன். உனக்கு கமல் ரொம்ப பிடித்தவர் என்று அவரை வைத்து படம் பண்ணும் என கூறிவிட்டாராம். இப்படி இயக்குனர்களே  பேசிக்கொண்டு படங்களை இயக்கினார்.

எப்படியோ லோகேஷ் கனகராஜ் தனது ஆசை நாயகன் கமலுக்கு விக்ரம் படத்தின் கதையை சொல்லி ஓங்கி  தற்பொழுது படமும் எடுத்து விட்டார் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது. இப்படி சினிமா இயக்குனர்கள் போட்டி போட்டுக்கொண்டு படங்களை எடுத்து வருகின்றனர்.