கொரோனா என்ற ஒற்றை சொல் உலக நாடுகளை மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது. இந்நோயினை தடுக்க பல நாட்டு அரசுகளும் மற்றும் உலக சுகாதார அமைப்பும் இந்நோய்க்கான எதிர்வினையாற்றும் மருந்தை கண்டுபிடித்து வருகின்றனர் இருப்பினும் இந்நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பல நாட்டு அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் இருப்பினும் இது எளிதில் தொற்றும் நோய் என்பதால் இதனை தடுக்க அரசுகள் போராடி வருகிறது.கொரோனா வைரஸ் நோய் தொடங்கிய நாளிலிருந்து மருத்துவர்கள், காவலர்கள் ,செவிலியர், தூய்மைப் பணியாளர் ,சுகாதாரத்துறை ஊழியர்கள் போன்ற பலரும் கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு நோய் தடுப்பு பணிக்காக இரவு பகல் பார்க்காமல் இவர்கள் தனது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர் இவர்களை தமிழக அரசு முன்கள வீரர்கள் என பெருமையுடன் அழைத்து வருகிறது.இந்த நிலையில் டெல்லியில் ஆம்புலன்ஸ் (முன்கள வீரர்) ஓட்டுனர் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
அது என்னவென்றால் டெல்லியில் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் உயிரிழந்த கொரோனா நோயாளி ஒருவரை இறக்கி வைத்துவிட்டு இறுதிச்சடங்கு முடிவதற்குள் தனது முகத்தை சவரம் செய்து கொள்கிறார். பாதுகாப்பு உடையுடன் நின்றுகொண்டு ஆம்புலன்ஸ் சைடு கண்ணாடியை பார்த்து முகச்சவரம் செய்துகொள்கிறார் தனது மீண்டும் மேற்கொண்டார். இச்செய்தி தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த மக்கள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
முகத்தை சவரம் செய்ய நேரத்தை ஒதுகமால் அயராது பாடுபட்டு வருகின்றனர் தடுப்பு பனியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.