தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக வெற்றி படங்களை கொடுத்து வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் கூட அதிக அளவு வசூலை ஈட்டியது. அதைத்தொடர்ந்து அடுத்து ஒரு ஹிட் படத்தை கொடுக்க தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் கைகோர்த்து வாரிசு என்னும் திரைப்படத்தில் நடித்து உள்ளார்.
இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிடப்பட குழு திட்டமிட்டுள்ளது. ஆனாலும் இந்த படத்தில் அதிகம் தமிழ் நடிகர் நடிகைகள் தான் நடித்துள்ளனர். வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக ராஷ்மிகா மந்தனா கைகோர்த்துள்ளார் அவர்களுடன் இணைந்து இந்த படத்தில் முன்னணி நடிகர்களான பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பூ, யோகி பாபு, சம்யுக்தா, சங்கீதா, ஷாம் போன்ற பலரும் நடித்துள்ளனர்..
இந்த படத்தில் இருந்து விஜயின் போஸ்டர்கள் மற்றும் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பை பெரிய அளவில் ஏற்படுத்தி உள்ளது. விஜய் ரசிகர்கள் முதற்கொண்டு மக்கள் என பலரும் வாரிசு படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்
அந்த வகையில் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலில் வெளியாகும் என ஆரம்பத்தில் இருந்தே சொல்லப்பட்டது இருந்தாலும் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை படக்குழு வெளியிடாமல் இருந்து வருகின்றன. இந்த நிலையில் youtube பிரபலமான பயில்வான் ரங்கநாதன் வாரிசு படம் குறித்து பேசி உள்ளார்.
அவர் பேசியது வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகாது அதற்கு மாறாக குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி தான் வாரிசு வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார் இதைக்கேட்ட விஜய் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.