சினிமா உலகில் பல சிறந்த நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து படங்களில் நடித்து உள்ளது வழக்கம் அதே சமயம் ஒரு சில ஹீரோக்கள் இணைந்து நடிக்காமல் இருக்கின்றனர். அவர்கள் இணைந்து நடித்தால் அந்த படம் வெற்றியை நோக்கி ஓடும் அந்த வகையில் சிவகார்த்திகேயனும், சந்தானமும் இணைந்து நடித்தால் அந்த படம் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்பது ஊரறிந்த விஷயம்.
ஆனால் இவர்கள் இதுவரையிலும் சினிமா உலகில் இணைந்து நடிக்கவில்லை என்பது தான் உண்மை. ஒரு பக்கமும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் மறுபக்கம் நடிகர் சந்தானம் காமெடி நடிகராக இருந்து இருந்தாலும் தற்போது ஹீரோவாக மாறி ஒரு பக்கம் தொடர்ந்து நடிக்கிறார்.
எந்த காரணத்தினாலோ என்னவோ இவர்கள் இருவரும் இணையாக முடியாமலேயே போனது. இருவரும் தனித்தனியாக தற்போது காமெடி மற்றும் ஆக்சன் சென்டிமெண்ட் கலந்த படங்களில் நடித்து அசத்தி இருவரும் ஹீரோவாக நடித்து வருகின்றனர். இவர்கள் இருவருமே சின்னத்திரையில் இருந்து வந்தவர்களே ஆனாலும் தற்போது தனித்தனியாகத் தான் நடித்து உள்ளனர்.
இவர்கள் இருவரும் படங்களில் இப்படி தனியாக நடிப்பது பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. மேலும் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை இருப்பதாகவும் கூறுகின்றனர் ஆனால் அது எல்லாம் ஒன்றும் கிடையாது இருவரும் இணையாமல் போனதற்கு வேறொரு காரணம் என கூறி உள்ளார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். அவர் சொன்னது.
இருவருக்கும் இடையே எந்த ஒரு ஈகோவும் கிடையாது இணைந்து நடிக்கும் படி சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை அந்தக் காரணத்தினால்தான் இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.