சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி சமீபகாலமாக சிறப்பான கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதால் அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நல்ல வரவேற்பை பெறுகின்றன அந்த வகையில் தீரன் அதிகாரம் ஒன்று, கைதி ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் கார்த்தியை நம்பி பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பட வாய்ப்பை அள்ளிக் கொடுக்கின்றனர்.
அந்த வகையில் கைதி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கார்த்தி அவரது பள்ளி நண்பரான லக்ஷ்மன் ராஜா என்பவரின் தயாரிப்பில் உருவான “தேவ்” என்ற திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இந்த திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது இதனால் தயாரிப்பாளர் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார்.
இதை உணர்ந்து கொண்ட கார்த்தி அடுத்ததாக உங்களுக்கு ஒரு படத்தை பண்ணி தருகிறேன் என கூறினார். ஆனால் அது இதுவரை நிறைவேறாமல் போனது மேலும் லக்ஷ்மன் ராஜா அவரை நம்பி ஒரு படத்தின் கதையை சரியாக தேர்வு செய்து வைத்திருந்தார் அந்த திரைப்படத்தில் தற்போதைய கார்த்திக்கு பதிலாக நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அந்த படத்திற்கு “காரி” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டிலே வித்தியாசமாக இருப்பதால் படத்தின் கதையும் வித்தியாசமாக இருக்கும் என தற்பொழுது கணிக்கப்பட்டுள்ளது. சசிகுமாரின் ஏற்கனவே பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்த வகையில் இவர் எம்ஜிஆர் மகன், பகைவனுக்கும் அருள்வாய், ராஜவம்சம் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.
இப்படி இருக்க இந்த திரைப்படமும் அவருக்கு நல்லதொரு வெற்றியை கொடுக்கும் என தற்போது எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தயாரிப்பாளரும் சசிகுமாரை நம்பி தற்போது களத்தில் குதித்துள்ளார் இந்தப் படம் நிச்சயம் வெற்றிப்படமாக நிச்சயம் மாறும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.