கேரவன் ஒன்னும் சீட்டுகட்டு விளையாடுற இடமில்ல – நடிகர்கள் பண்ணும் லூட்டி தாங்க முடியல..கொந்தளித்த கே ராஜன்.!

k. rajan
k. rajan

சினிமா உலகில் புதுமுக நடிகர் நடிகைகள் எப்படி வருகிறார்களோ அதே போல புது இயக்குனர்களின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அந்த வகையில் அறிமுக இயக்குனர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் நாட் ரீச்சபிள். இந்தப் படத்தில் சுபா தேவராஜ், சாய் கான்யா ஆகியவர்கள் அறிமுக ஹீரோயின்களாக படத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் விழாவில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளரும் இயக்குனருமான கே ராஜன் கலந்து கொண்டார் சினிமாவைப் பற்றி சில விஷயங்களை சொல்லி உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். இப்பொழுது இருக்கும் சினிமாவை காப்பாற்றுவது சிறிய பட தயாரிப்பாளர்கள் தான் பெரிய பட தயாரிப்பாளர்கள் யாருமே சினிமாவை காப்பாற்ற வில்லை.

அதுபோல பெரிய பெரிய ஹீரோக்களும் சினிமாவை காப்பாற்ற முன் வரவில்லை அவங்க அவங்க பொழைக்கிறத பாக்குறாங்க அது மட்டும் இல்லாமல் தமிழ் படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத் மும்பையில் நடத்தி வருவதால் தமிழ் சினிமா தொழிலாளர்கள் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. என்னை பொறுத்தவரை சினிமா நன்றாக இருக்க வேண்டும் பணம் போட்டவர்கள் நன்றாக இருக்க வேண்டும் அப்பொழுது நான் தான் சினிமா நன்றாக இருக்கும்.

ஆனால் இங்கு இருக்கும் யாருமே அதை எண்ணி கூட பார்ப்பதில்லை. ஜாலியா ஜம்முனு ஏசி கார்ல வராங்க கேரவன்ல ஜாலியா சீட்டு கட்டு விளையாடுறாங்க இப்படி நல்லா என்ஜாய் பண்றாங்க ஆனால் ஷார்ட்க்கு ரெடியான்னு கூப்பிட்டா வருவதில்லை போன் பண்ணி கூப்பிட்டாலும் வருவதில்லை. எவன் வீட்டு காசோ இல்ல கேரவனில் உட்கார்ந்து கிட்டு இப்படி அட்டகாசம் பண்றீங்க இதை நான் யாரை பற்றியும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

இது எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு மணி நேரம் தாமதம் ஆனால் தயாரிப்பாளர்களுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? கேரவனிலிருந்து ஸ்பாட்டுக்கு வர பவுன்சர் மறுபடியும் கேரவனுக்கு போக பவுன்சர் நீங்க என்ன கெட்டவங்களா தீவிரவாதியா இல்ல இல்ல அப்புறம் ஏன் இந்த பாதுகாப்பு தயாரிப்பாளர்களுக்கு தான் தற்பொழுது பாதுகாப்பு தேவை உங்களை வைத்து படம் பண்ணுகிறார்கள் என கூறினார் மேலும் அவர் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுப்பது நல்லது என கூறினார்.