நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தமிழில் உயிரிலே கலந்தது, காக்க காக்க, பூவெல்லாம் கேட்டுப்பார், பேரழகன், சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர் அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்து பின்பு 2007ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களது குடும்ப வாழ்க்கையை இத்தனை வருடங்களாக சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் இருவருக்கும் தியா மற்றும் தேவ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். கல்யாணம் ஆன பிறகும் ஜோதிகா சினிமாவில் தொடர்ந்து ஹீரோயினாக நல்ல கதைகளம் உள்ள படம் மற்றும் சோலோ படங்களில் நடித்த அசத்தி வருகிறார்.
மேலும் சூர்யாவும் தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலாவுடன் ஒரு படம் மற்றும் வாடிவாசல் போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நடிகை ஜோதிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் சூர்யாவை பற்றி யாருக்கும் தெரியாத சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் அவர் கூறியது சூர்யா.
சூட்டிங் இருந்தாலும் குழந்தைகளின் பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா போன்றவற்றிற்கு தவறாமல் கலந்து கொள்வார். மேலும் எப்படிப்பட்ட சூட்டிங் ஆக இருந்தாலும் அதை பாதியிலேயே நிறுத்திவிட்டு நேரடியாக அங்கு சென்று விடுவாராம். குழந்தைகள் சம்பந்தப்பட்ட முக்கிய நாட்களை காலண்டரில் குறித்து வைத்துக் கொள்வார் அந்த நாட்களில் குழந்தைகளுடன் இருக்க வேண்டும் என நினைத்து அந்த நாட்களை மிஸ் பண்ண மாட்டார்.
சூரியா தான் பள்ளிக்கு குழந்தைகளை கொண்டு சென்று விடுவார் சூர்யா இல்லாதபட்சத்தில் மாமா சிவகுமார் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு செல்வார். இதுவரைக்கும் ஒரு நல்ல அப்பாவாக சூர்யா இருந்து வருகிறார் இதை நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என ஜோதிகா கூறியுள்ளார்.