அந்த விசயத்தில் சன்னி லியோனை அடிச்சிக்க ஆளே இல்லை.. குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா அதிரடி பதிவு.

sunny-leone-and-darsha-dupta
sunny-leone-and-darsha-dupta

டிவியில் ஒளிபரப்படும் நிகழ்ச்சியில் மக்களை கவர்கிறது. அந்த நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து ஒரு கட்டத்தில் வெள்ளித்திரைக்கு செல்கின்றனர் பிரபலங்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயன், சந்தானம்,ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரை பக்கம் அடியெடுத்து வைத்துள்ளார் தர்ஷா குப்தா.

இவர் மோகன்ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் அண்மையில் வெளியாகிய மக்களை கவர்ந்த திரைப்படம் “ருத்ரதாண்டவம்” இந்த திரைப்படத்தில்  ரிஷிக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார் தர்ஷா குப்தா. அதைத்தொடர்ந்து தற்போது ஒ மை கோஸ்ட் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

வெள்ளித்திரையில் இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும் அதற்கு முன்பாக சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலாமாக தான் மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

என்பதை உணர்ந்து கொண்டு அவரும் ஒரு கட்டத்தில் இன்ஸ்டா பக்கத்தில் குடியேறி ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு புகைப்படங்களை அள்ளி வீசி ரசிகர்களை தக்கவைத்துக் கொண்டார். தற்போது தர்ஷா குப்தா நடிகை சன்னி லியோனுடன் இணைந்து தான் ஒ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர்களுடன் இணைந்து சதீஷ் மற்றும் பல முக்கிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சன்னி லியோனே பற்றி இன்ஸ்டா பக்கத்தில்  பதிவு ஒன்றை போட்டுள்ளார் . அதில் அவர் கூறியது : சன்னி லியோன் மிகவும் இனிமையான கனிவான இதயம் கொண்ட அழகான பொம்மை போன்ற பெண் அவருடன் பணி புரிவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

எங்கள் அடுத்த எதிர்பார்ப்பு “ஒ மை கோஸ்ட்” படத்தை நாங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை தர்ஷா குப்தா சன்னிலியோனுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.