தற்போது சினிமாவில் பல்வேறு துறைகளில் இருக்கும் நபர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் பிரல தொழிலதிபர் மட்டுமின்றி சரவணா ஸ்டோர் உரிமையாளர் ஆன அண்ணாச்சி அவர்கள் திரைப்படத்தில் நடிக்க முன்வந்தார் அந்த வகையில் சமீபத்தில் தி லெஜென்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
பொதுவாக இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் இவர் சினிமாவுக்கு மிகவும் புதிதான ஒருவர் என்றே சொல்லலாம் அந்த வகையில் இவர் நடித்த இந்த திரைப்படத்தினை ஜெர்ரி ஜெடி என்ற இயக்குனர் தான் இயக்கி உள்ளார்.
இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தின் மூலமாக சரவணா ஸ்டோர் அண்ணாச்சி எப்படி திரைப்படத்தில் நடிப்பார் அவருடைய நடிப்பு எப்படி இருக்கும் படம் நன்றாக ஓடுமா இல்லை தோல்வியை சந்திக்குமா என மக்களிடம் பெரும் விவாதம் ஏற்பட்டது மட்டுமில்லாமல் இவர்களுடைய கருத்துக்களுக்கு சரியான பதிலடி கொடுத்து வருகிறது சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் திரைப்படம்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தின் விமர்சனங்கள் மிகவும் நன்றாக அமைந்தது மட்டுமில்லாமல் திரைப்படம் நல்ல வசூல் செய்து வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் வசூல் வேட்டையானது தீவிரம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை உருவாக்குவதற்காக அண்ணாச்சி அவர்கள் பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த திரைப்படம் வெளிவந்த சில தினங்களிலே சுமார் 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இனி வரும் நாட்களில் இந்த திரைப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை ரசிகர்கள் மிக ஆவலுடனும் ஆர்வத்துடனும் தெரிந்து கொள்ள காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்பொழுது பல நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி மாபெரும் வசூல் செய்து வரும் நிலையில் ஒரு சிலர் திரைப்படங்கள் வசூல் மண்ணை கப்புவது வழக்கமான செயல் தான் ஆனால் கொஞ்சம் கூட அனுபவம் இல்லாத ஸ்டோர் அண்ணாச்சி இவ்வளவு வசூல் செய்தது மிகவும் பிரம்மிக்க வைத்துள்ளது.