நடிகர்கள் வாங்கும் சம்பளத்தால் வரும் பிரச்சனைகள் – அப்போதே தீர்வு கண்ட ரஜினி, விஜய்காந்த்.!

rajini-and-vijayakanth
rajini-and-vijayakanth

தமிழ் சினிமா உலகில் சமீபகாலமாக நடிகர் நடிகைகள் ஹிட் படம் கொடுக்கிறார்களோ இல்லையோ தனது சம்பளத்தை சற்று உயர்த்தி வருகின்றனர் இதனால் தயாரிப்பாளர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்தும் சரி, பல தயாரிப்பாளர்களும் சரி பல்வேறு விதமான கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

அதில் ஒன்றாக நடிகர்கள் சம்பளத்தை குறைத்து வாங்க வேண்டும் என கேட்டுக்கொண்டு வருகின்றனர் அதற்கு காரணம் இப்பொழுது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்கள் சுமார் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர் அவர்களுக்கு கீழ் இருப்பவர்களும் கணிசமாக தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளனர் சொல்லப்போனால் ஒரு நடிகர் தற்பொழுது 10 கோடிக்கு குறைவாக சம்பளமே வாங்குவதில்லை..

அப்படிப்பட்ட சூழல் நடக்கிறது இதனால் தயாரிப்பாளர்கள் ரொம்பவும் பாதிக்கப்படுகின்றனர் மேலும் நடிகர்கள் அதிகம் சம்பளம் வாங்குவதால் படத்தின் தரம் குறைகிறது எனவும் ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. தயாரிப்பாளர்கள் ஒரு படத்தை எடுக்க வட்டிக்கு தான் காசு வாங்கி படத்தை எடுக்கின்றனர் அதை புரிந்து கொள்ளாமல் நடிகர், நடிகைகள் சம்பளத்தை உயர்த்தி காசு வாங்குவது எந்த விதத்தில் நியாயம் என பல தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

உண்மையில் 80 90களில் இருந்த ரஜினி விஜயகாந்த் எவ்வளவோ பரவாயில்லை எனவும் தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர் காரணம் சினிமா படங்களில் நடிக்கும் பொழுது கதைக்கு ஏற்றவாறு தனது சம்பளத்தை ஏற்றியும் குறைத்தும் சம்பளத்தை ரஜினி விஜயகாந்த் வாங்கியுள்ளனர் மேலும் அந்தப் படத்தின் லாபத்தை பொறுத்து கூட சில நடிகர்கள் சம்பளம் குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ வாங்கி உள்ளனர் எனவும் கூறுகின்றனர்..

இப்படிப்பட்ட நடிகர்கள் இருந்தால் சினிமா நன்றாக இருக்கும் ஆனால் தற்பொழுது இருக்கும் நடிகர்கள் படம் வெற்றியோ தோல்வியோ சம்பளத்தை உயர்த்துவதை மட்டும் குறிக்கோளாக வைத்து வருகின்றனர். இது எங்க போய் முடியுமோ என கூறி தயாரிப்பாளர்கள் புலம்பி தவித்து வருகின்றனர்.