வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை அதனால் இதைதான் செய்கிறேன் அண்ணாமலை சீரியல் நடிகையின் தற்போதைய நிலை.

manjuri
manjuri

மீடியா உலகில் பயணிக்க வேண்டும் என பலர் போட்டி போட்டுக் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அப்படி சின்னத்திரையில் சிறப்பாக வலம் வந்தவர் தான் நடிகை மஞ்சுரி இவர் முதன்முதலாக குட்டி பத்மினி மூலம் திரையுலகில் நுழைந்தார். இவர் முதன்முதலாக உறவுகள் என்ற சீரியலில் நடித்ததன் முலம் அறிமுகமானார். இவர் நடிக்க வரும் பொழுது சிசி இவரெல்லாம் ஒரு பெண்ணை எதற்கு நீ இருக்கிறாய் என்று கேவலமாக பலர் திட்டினர். குடும்ப பெண்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கொண்டவர் தான் நடிகை மஞ்சுரி.

இவர் உறவுகள் ,கோலங்கள் ,அண்ணாமலை போன்ற பல தொடர்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் செய்துகொண்ட  பிறகு சீரியலை விட்டு விலகினார் தற்பொழுது ஒரு பேட்டி ஒன்றில் நடிகை மஞ்சரி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

என்னுடைய சொந்த ஊர் சிங்கப்பூர். நான் முதன் முதலாக உறவுகள் என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்து அதன் பின் நிறைய சீரியல்களில் நடிக்க தொடங்கினேன். இதுவரையிலும் தமிழ் மற்றும் பிற மொழிகளில் சேர்த்து 50-க்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்து உள்ளேன். எந்த ஒரு கதாபாத்திரம் இருந்தாலும் ஏற்று நடிப்பேன் ஆனால் எல்லோருமே எனக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் தான் நன்றாக இருக்கும் என்று கூறுவார்கள். மேலும் எனக்கு சீரியலில் அழுகிற காட்சி வந்தால் சுத்தமா புடிக்கவே புடிக்காது. என்றால் நான் தைரியமான பொண்ணு மக்கள் எங்களை திட்டுவது தான் என் நடிப்புக்கு பலம்.

manjuri

நான் கோலங்கள் சீரியல் நடிக்கும் போது கர்ப்பமாக இருந்தேன் எனக்கு குழந்தை பிறந்த பிறகு நான் சிங்கப்பூரில் அங்கேயே தங்கி விட்டேன் நான் என்னுடைய கேலரியை விடவில்லை சிங்கப்பூரிலுள்ள சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன் அதுமட்டுமில்லாமல் தமிழ் திரையில் நடிக்க எனக்கு ஆர்வமாக இருக்கிறது. ஆரம்பத்தில் நான் குண்டாக இருந்தேன் இப்போ ஒல்லியா ஹேர் ஸ்டைல் கட் பண்ணிட்டு இருக்கேன் நிறைய பேர் உங்களிடம் வித்தியாசம் இருக்கே என கேட்கின்றனர்.

நான் மீண்டும் தமிழ் சீரியல்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் ஆனால் தற்போது வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறது என கூறினார் இருப்பினும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன் என கூறியுள்ளார்.